கடந்த 1941ம் ஆண்டு தமிழில் வெளியான "அசோக் குமார்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த ரஞ்சனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த திரைப்படம் தான் கடந்த 1948ம் ஆண்டு பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எஸ் வாசன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான சந்திரலேகா என்கின்ற திரைப்படம். இந்த படம் வெளியாகி 75 ஆண்டுகளையும் கடந்து விட்டது என்றாலும், இன்றும் அப்படத்தின் சில சாதனைகள் முறியடிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. அப்பேர்ப்பட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் ரஞ்சன்.
1949 ஆம் ஆண்டு முதல் இவர் ஹிந்தி மொழியிலும் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இறுதியாக 1969 ஆம் ஆண்டு வெளியான "கேப்டன் ரஞ்சன்" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். வெகு சீக்கிரத்தில் தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு குட் பை சொன்ன ரஞ்சன், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனது குடும்பத்தோடு செட்டிலான நிலையில் கடந்த 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி காலமானார்.