ஓடிடியில் ரிலீசாகும் முன்பே டிவியில் ஒளிபரப்பாக உள்ள லால் சலாம் - எப்போ தெரியுமா?

First Published | Dec 1, 2024, 2:30 PM IST

Lal Salaam Movie TV Premiere : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன லால் சலாம் திரைப்படம் இதுவரை ஓடிடிக்கு வரவில்லை.

Lal salaam

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, கடந்த 2015-ம் ஆண்டு முதல் எந்த படங்களையும் இயக்காமல் இருந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர், மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு லைகா தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Lal Salaam Rajinikanth

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை கதையின் நாயகர்களாக வைத்து லால் சலாம் என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்த ஐஸ்வர்யா, அப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறி இருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் இருந்தது. அதுமட்டுமின்றி ரிலீஸ் சமயத்தில் இதை ரஜினி படமாகவே புரமோட் செய்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... 33 ஆண்டுகளுக்கு பின் இணையும் மாஸ்டர் பீஸ் கூட்டணி! ரஜினியின் அடுத்த பட அப்டேட்

Latest Videos


Lal Salaam Movie Team

இப்படி மிகப்பெரிய அளவில் பில்டப்போடு ரிலீஸ் ஆன லால் சலாம் திரைப்படம் சுமாரான திரைக்கதை காரணமாக படுதோல்வியை சந்தித்தது. படத்தின் தோல்விக்கு பின்னர் அளித்த பேட்டியில், படத்துடைய சில முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டுடிஸ்க் தொலைந்துபோனதும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக கூறி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவரின் இந்த வெளிப்படையான பேட்டியால் லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

Lal Salaam TV Premiere

தொலைந்துபோன ஹார்டு டிஸ்க் மீண்டும் கிடைத்த பின்னரே அப்படத்தை ஓடிடியில் வெளியிட முடியும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக கூறிவிட்டதாம். இதன் காரணமாக படம் ரிலீஸ் ஆகி 10 மாதங்கள் ஆகியும் இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், லால் சலாம் படம் ஓடிடிக்கு முன்னதாகவே டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. வருகிற டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஜீ சினிமா மற்றும் ஜீ டிவியில் லால் சலாம் படத்தின் இந்தி வெர்ஷன் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இப்படத்தின் தமிழ் வெர்ஷன் பற்றி இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்... ரஜினிக்காக இளையராஜா விசிலடித்தே உருவாக்கிய எவர்கிரீன் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

click me!