என்னால தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஒர்க் அவுட்டாச்சு – நடிகர் சிவா அதிர்ச்சி தகவல்!

Published : Dec 01, 2024, 01:29 PM IST

Mirchi Shiva says He is Only Reason for Nayanthara Vignesh Shivan Love and Marriage : நானும் ரௌடி தான் படத்தில் நான் நடித்திருந்தால் நயன்தாரா விக்னேஷ் சிவன் ரெண்டு பேருமே காதலிச்சிருக்க மாட்டார்கள் என்று நடிகர் சிவா அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

PREV
15
என்னால தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஒர்க் அவுட்டாச்சு – நடிகர் சிவா அதிர்ச்சி தகவல்!
Soodhu Kavvum 2: Naatum Naatu Makkalum

Mirchi Shiva says He is Only Reason for Nayanthara Vignesh Shivan Love and Marriage : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன், ஆனந்தராஜ், மன்சூர் அலி கான் ஆகியோர் பலர் நடித்திருந்த படம் நானும் ரௌடி தான். ரொமாண்டிக் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் 2015ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்து, திருமணமும் நடந்தது. இப்போது இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.

25
Soodhu Kavvum 2: Naatum Naatu Makkalum Released Date

இந்த நிலையில் தான் நடிகர் சிவா அவர்களது காதலுக்கு நான் தான் காரணம் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார். ஏன், அவ்வாறு சொல்கிறார், காரணம் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். 12பி படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவா. ஆளவந்தான், விசில், சென்னை 600028, சரோஜா, தமிழ் படம், வா, பதினாறு, கலகலப்பு, யா யா, வணக்கம் சென்னை, காசேதான் கடவுளடா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

35
Soodhu Kavvum 2: Naatum Naatu Makkalum

பார்ட்டி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போது சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை புரோமோட் செய்யும் வகையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றியும் பேசியுள்ளார்.

45
Soodhu Kavvum 2 Release Date

அதில், தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் தன்னால் தான் காதல் மலர்ந்தது, அவர்கள் இந்த நிலைக்கு நான் தான் காரணம் என்று பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும் ரௌடி தான் படத்தில் நான் நடிக்க வேண்டியது. விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொல்லும் போதே எனக்கு கதை பிடித்துவிட்டது. ஆனால், அந்த கதைக்கு நான் பொறுத்தமில்லை என்று தெரிந்து சைலண்டா வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

55
Nayanthara Marriage

ஒருவேளை நான் அந்தப் படத்தில் நடித்திருந்தால் எனக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கமாட்டார். வேறொரு ஹீரோயின் தான் தேர்வு செய்திருப்பார்கள். அதனால், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்திருக்காது. ஏன், இருவருமே பார்த்திருக்க கூட மாட்டார்கள். நான் நடிக்காமல் போனதால் தான் நயன்தாரா நடித்தார். இருவருக்கும் காதல் ஒர்க் அவுட்டாச்சு. என்னால் தான் இருவருக்குமே கல்யாணமே நடந்தது என்று கூறியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories