Vignesh shivan
தமிழ் சினிமாவில் இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விக்னேஷ் சிவன் இருந்தாலும் நடிகை நயன்தாராவின் கணவர் என்கிற அடையாளம் தான் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன். அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Vignesh Shivan, Nayanthara
நானும் ரெளடி தான் படத்துக்கு பின்னர் அவர் சூர்யாவை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. பின்னர் மீண்டும் விஜய் சேதுபதி உடன் கூட்டணி அமைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற திரைப்படத்தை இயக்கினார் விக்கி. இப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து ஏகே 62 திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார் விக்னேஷ் சிவன். ஆனால் அப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே தயாரிப்பு நிறுவனத்துக்கு கதை திருப்தி அளிக்காததால் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கினர்.
LIK movie
அஜித் பட வாய்ப்பு கை நழுவி போனதால், தான் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதாக இருந்து கைவிடப்பட்ட எல்.ஐ.கே. படத்தை மீண்டும் தூசிதட்டி எடுத்த விக்னேஷ் சிவன், அதில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைத்து அப்படத்தை படமாக்கி இருக்கிறார். எல்.ஐ.கே படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா முதல் மஞ்சு வாரியர் வரை; அதிகம் சம்பளம் வாங்கும் 7 தென்னிந்திய நடிகைகள்!
Director vignesh shivan
விக்னேஷ் சிவன் எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருப்பவர். அதனால் அவருக்கு எக்ஸ் தளத்தில் 19 லட்சம் பாலோவர்களும், இன்ஸ்டாவில் 40 லட்சம் பாலோவர்களும் உள்ளனர். இந்த நிலையில், இன்று திடீரென தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தை டெலிட் செய்து அதிலிருந்து வெளியேறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
vignesh shivan Quits Twitter
விக்னேஷ் சிவன் தன் எக்ஸ் தள கணக்கை டெலிட் செய்ததற்கு அதில் அவருக்கு அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியதே காரணம் என கூறப்படுகிறது. அண்மையில் தனுஷுடனான பிரச்சனை மட்டுமின்றி, சமீபத்தில் பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் பான் இந்தியா இயக்குனர்களை வைத்து ரவுண்டு டேபிள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அதில் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார்.
vignesh shivan Deleted X Account
பாலிவுட்டில் இருந்து கபீர் கான், மலையாளத்தில் இருந்து லிஜோ ஜோசப் பெலிசேரி மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம், தெலுங்கில் இருந்து வெங்கி அட்லூரி, தமிழில் இருந்து விக்னேஷ் சிவன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கலந்துகொண்டனர். பான் இந்தியா இயக்குனர்களுக்கான நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் ஏன் கலந்துகொண்டார் என கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள் அவரை குரூப்புல டூப்பு என்றெல்லாம் தரக்குறைவாக விமர்சித்து வந்தனர். இதனால் டென்ஷன் ஆகி அவர் எக்ஸ் தளத்தை விட்டு விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சிறுத்தை சிவா படத்துக்காக ஒல்லியாகிவிட்டாரா அஜித்? வைரலாகும் ஸ்லிம் லுக் போட்டோஸ்