ரஜினிக்காக இளையராஜா விசிலடித்தே உருவாக்கிய எவர்கிரீன் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

Published : Dec 01, 2024, 09:58 AM IST

Ilaiyaraaja Song Secret : ரஜினிகாந்தின் படத்துக்காக இளையராஜா விசிலடித்து ட்யூன் போட்ட பாடல் ஒன்று பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த கதையை பற்றி பார்க்கலாம்.

PREV
14
ரஜினிக்காக இளையராஜா விசிலடித்தே உருவாக்கிய எவர்கிரீன் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Ilaiyaraaja

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இசைஞானி இளையராஜா. அவரின் இசையில் உருவான பாடல்கள் தான் இன்றளவும் மக்களுக்கு மருந்தாக இருந்து வருகிறது. சோகம், சந்தோஷம், காதல், ரொமான்ஸ் என அனைத்து எமோஷன்களுக்கும் ஏற்ற ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். அவர் அதிகளவில் இசையமைத்த ஹீரோக்கள் என்றால் அது ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தான். அப்படி ரஜினிக்காக இளையராஜா இசையமைத்த ஒரு மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தற்போது பார்க்கலாம்.

24
Isaignani ilaiyaraaja

ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், மாதவி, வினு சக்ரவர்த்தி, சுலோச்சனா நடிப்பில் உருவான படம் தம்பிக்கு எந்த ஊரு. இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். இப்படம் படமாக்கப்பட்டபோது, அனைத்து காட்சிகளின் ஷூட்டிங்கும் முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எஞ்சி இருந்தது. இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருந்தார்களாம்.

இதையும் படியுங்கள்... 33 ஆண்டுகளுக்கு பின் இணையும் மாஸ்டர் பீஸ் கூட்டணி! ரஜினியின் அடுத்த பட அப்டேட்

34
Thambikku Entha Ooru Movie Song Secret

ஆனால் அந்த சமயத்தில் இளையராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவருக்கு மருத்துவமனையில் ஆபரேஷனும் நடைபெற்றதாம். ஆபரேஷனுக்கு பின் அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்க, அந்த சமயத்தில் இளையராஜாவை பார்த்து நலம் விசாரிக்க சென்ற பஞ்சு அருணாச்சலம், அப்போது பாடல்களுக்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருக்கும் விஷயத்தை கூறி இருக்கிறார். இதைக்கேட்ட இளையராஜாவுக்கு ஒரு ஐடியா தோன்றி இருக்கிறது.

44
Secret Behind kadhalin deepam ondru Song

நான் விசிலடிக்க அடிக்க நீங்கள் பாடல் வரிகளை எழுதுகிறீர்களா என்று கேட்டதும், பஞ்சு அருணாச்சலமும் டபுள் ஓகே சொன்னதும். இளையராஜா விசில் அடித்து ட்யூன் போட்டு இருக்கிறார். அந்த பாடல் தான் 1980-களில் ரசிகர்களின் லவ் ஆந்தமாக இருந்தது. அது வேறெதுவுமில்லை தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்ற ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் தான். இளையராஜா ட்யூன் மற்றும் பஞ்சு அருணாச்சலத்தில் பாடல் வரிகள் மட்டுமின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலும் அப்பாடலுக்கு உயிர்கொடுத்தது.

இதையும் படியுங்கள்... கன்டன்டே கொடுக்காம எலிமினேட் ஆன ஷிவகுமாருக்கு பிக் பாஸ் கொடுத்த சம்பளம் இவ்வளவா?

Read more Photos on
click me!

Recommended Stories