Rajinikanth
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
coolie
கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு, நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரே ஆண்டில் 35 படங்கள்; இன்றும் பல சாதனை படைக்கும் அந்த தென்னக நடிகர் யார் தெரியுமா?
Rajinikanth, Maniratnam
இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றுமொரு படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்தை வைத்து தளபதி என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டும் உறுதியானால் இவர்கள் இருவரும் 33 ஆண்டுகளுக்கு பின் இணையும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க வாய்ப்புள்ளது.
Thug life
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தக் லைஃப் திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படம் ரிலீஸ் ஆன பின் ரஜினி பட பணிகளை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... வந்த சுவடு தெரியாமல் கிளம்பிட்டாரா? பிக் பாஸ் தமிழ் சீசன் 8 - இந்த வார எலிமினேஷன் யார்?