குருவை மிஞ்சிய சிஷ்யன்; ஷங்கரை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் அட்லீ!

Published : Dec 01, 2024, 12:45 PM IST

Atlee Salary : ஜவான் படம் மூலம் பான் இந்தியா இயக்குனராக உருவெடுத்துள்ள அட்லீ, தன்னுடைய அடுத்த படத்துக்காக வாங்க உள்ள சம்பளம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
குருவை மிஞ்சிய சிஷ்யன்; ஷங்கரை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் அட்லீ!
Atlee, Shankar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யன் தான் அட்லீ. அவர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மாஸ் வெற்றியை ருசித்த அட்லீ, அடுத்த படமே தளபதி விஜய்யை வைத்து இயக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. அதை கெட்டியாக பயன்படுத்திக் கொண்ட அவர் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்டி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

24
Director Atlee

தெறி படத்தை பார்த்து மெர்சலான விஜய், அடுத்தடுத்து அட்லீ உடன் மெர்சல், பிகில் என இரண்டு பிரம்மாண்ட படங்களில் பணியாற்றினார். இந்த விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியை பெற்ற அட்லீக்கு அடுத்ததாக பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று அங்கு சென்ற அட்லீ, முதல் படமே பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானை வைத்து இயக்கினார். இவர்கள் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றதோடு ரூ.1000 கோடி வசூலையும் வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... ஆளவிடுங்கடா சாமி! எக்ஸ் தளத்தில் இருந்து எஸ்கேப் ஆன விக்னேஷ் சிவன் - காரணம் என்ன?

34
Atlee vs Shankar Salary

ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறினார் அட்லீ. அவரின் கால்ஷீட்டுக்காக அங்குள்ள உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் வரிசைகட்டி காத்திருக்கின்றனர். அந்த வகையில் அவர் அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

44
Atlee salary for Salman Khan Movie

சல்மான் கான் படத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் எலைட் இயக்குனர்கள் லிஸ்ட்டிலும் இணைந்திருக்கிறாராம் அட்லீ. ஜவான் படத்தை இயக்க ரூ.60 கோடி சம்பளமாக வாங்கிய அட்லீ, அடுத்ததாக சல்மான் கான் படத்தை இயக்க ரூ.100 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் அட்லீ. அதுமட்டுமின்றி தன் குருவான இயக்குனர் ஷங்கரை விட அவர் டபுள் மடங்கு சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சிறுத்தை சிவா படத்துக்காக ஒல்லியாகிவிட்டாரா அஜித்? வைரலாகும் ஸ்லிம் லுக் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories