யாருக்கும் தெரியாமல் சமுத்திரக்கனி செய்து வரும் நல்ல விஷயங்கள் என்ன தெரியுமா?

Published : Dec 01, 2024, 05:34 PM IST

Interesting Facts About Samuthirakani : சமுத்திரக்கனியின் யாருக்கும் தெரியாத விஷயங்கள் பற்றி நாடோடிகள் பட நடிகர் தெரிவித்துள்ளார்.

PREV
14
யாருக்கும் தெரியாமல் சமுத்திரக்கனி செய்து வரும் நல்ல விஷயங்கள் என்ன தெரியுமா?
Interesting Facts About Samuthirkani

Interesting Facts About Samuthirakani : ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் சமுத்திரக்கனி. கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக ஆரம்பித்து இயக்குநர், நடிகர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டவர். சிவாஜி கணேசன் மற்றும் ராதா நடிப்பில் வந்த சூப்பர் ஹிட் படமான முதல் மரியாதை படத்தை பார்த்து நடிகராக வேண்டும் என்று ஆசைக் கொண்டு சென்னை வந்து என்று சினிமாவில் ஒரு நடிகராக, இயக்குநராக அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

24
Samuthirakani

2016 ஆம் ஆண்டு திரைக்கு வந்த விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றார். சுப்பிரமணியபுரம், ஈசன், சாட்டை, நிமிர்ந்து நில், விசாரணை, ரஜினி முருகன், வேலையில்லா பட்டதாரி 2, வட சென்னை, துணிவு, இந்தியன் 2, நந்தன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இப்போது ராஜாகிளி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

34
Interesting Facts About samuthirakani

இந்த நிலையில் தான் அவரைப் பற்றிய யாருக்கும் தெரியாத சில ரகசியங்களை நாடோடிகள் பட நடிகர் பகிர்ந்து கொண்டுள்ளார். எப்போதும் சமூக அக்கறை கொண்ட சமுத்திரக்கனி சொந்த ஊர் மக்களுக்காக விநாயகர் கோயில் கட்டிக் கொடுத்துள்ளாராம். இவ்வளவு ஏன், வருடந்தோறும் அன்னதானமும் செய்வாராம்.

44
Samuthirakani Unknown Facts

மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். அதில், இப்போது வரையிலும் 170 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உதவி அளித்திருக்கிறார். இது போன்று இன்னும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். ஆனால், இதெல்லாம் யாருக்கும் தெரியாது என்று அவர் கூறியிருக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories