மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா வெளியேறிவிட்டாரா? உண்மையை உடைத்த குஷ்பு!
மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நயன்தாரா மீதான சர்ச்சை எழுந்து வரும் நிலையில் குஷ்பு அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நயன்தாரா மீதான சர்ச்சை எழுந்து வரும் நிலையில் குஷ்பு அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அறிமுகம் ஆன படம் தான் மூக்குத்தி அம்மன். நயன்தாரா, அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க, ஊர்வதி, ஆர்ஜே பாலாஜி, ஸ்மிருதி வெங்கட், மௌலி, மயில்சாமி, அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ,திரைக்கு வந்த இந்த படம் ஆர்ஜே பாலாஜிக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.இந்தப் படத்தை ஐசனி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
சண்டை போட்ட நயன்தாரா? மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் என்ன பிரச்சனை?
இந்த படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு, தற்போது மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். மேலும், நயன்தாரா, ஊர்வசி, துனியா விஜய், ரெஜினா கஸாண்ட்ரா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, மீனா, அபிநயா, அஜய் கோஷ், ரவி மரியா, மைனா நந்தினி, சிங்கம்புலி, ஆர்ஜே பாலாஜி (கேமியோ), இனியா என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் நிறுவனம் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு இசைமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியது. இதில், நடிகை மீனாவை, நயன்தாரா கண்டுகொள்ளவில்லை... சீனியர் நடிகை என மதிப்பு கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இன்சல்ட் செய்த நயன்தாரா; மூஞ்சில் அடித்தது போல் பதிலடி கொடுத்த மீனா! பற்றி எரியும் புது சர்ச்சை!
இதே போன்று படப்பிடிப்பு தளத்தில், நயன்தாராவிற்கும் உதவி இயக்குநருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் சுந்தர் சி கோபத்தில் நயன்தாராவிடம் சண்டை போட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், சுந்தர் சி-யும் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் இதுகுறித்து நடிகை குஷ்பு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சுந்தர் சியின் நலம் விரும்பிகளுக்கு, மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், அதெல்லாம் உண்மை இல்லை. படப்பிடிப்பு திட்டமிட்டப்படி சீராக நடைபெற்று வருகிறது. சுந்தர் சி ஒன்றும் முட்டாள்தனமானவர் கிடையாது. அதே போன்று நயன்தாராவும் தனது திறமையை மிகவும் புரஃபெஷனல்.
மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா!
கடந்த காலத்தில் அவர் நடித்த ரோலில் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வதந்திகள் திருஷ்டி மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறன். நடப்பது நன்மையாக இருக்கட்டும். உங்களது நல்லெண்ணம், ஆசிர்வாதம் மற்றும் அன்பை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி என்று கூறியுள்ளார். இதன் மூலம் நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகவில்லை, தொடர்ந்து நடிக்கிறார் என்பதை... குஷ்புவின் பதிவு உறுதி செய்துள்ளது.