பார்த்த நொடியே நந்தனா மீது காதலில் விழுந்த மனோஜ்; நெஞ்சை தொடும் லவ் ஸ்டோரி!
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், இவருடைய காதல் கதை பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், இவருடைய காதல் கதை பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜாவுக்கு, கடந்த வாரம் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்... ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தன்னுடைய வீட்டில் முழு ஓய்வில் இருந்த மனோஜுக்கு நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மயங்கி கீழே விழுந்துள்ளார். இவரை குடும்பத்தினர், காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவருடைய இழப்பு தற்போது ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து மனோஜ் பாரதிராஜாவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 48 வயது ஆகும் மனோஜின் மறைவை தொடர்ந்து, இவரைப் பற்றிய பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
தீராத துயரம்; கண்ணீரோடு விடைகொடுத்த குடும்பத்தினர் - தகனம் செய்யப்பட்டது மனோஜ் உடல்!
அந்த வகையில், தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா முதல் படத்திலேயே மிகவும் அதிர்ஷ்டக்கார நடிகர் என பார்க்கப்பட்டார். பாரதிராஜாவின் இயக்கம், ஏ ஆர் ரகுமானின் இசை, ஓப்பனிங் சாங் என இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல் இந்த படத்தில், இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து சமுத்திரம், அல்லி அர்ஜுனா, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், போன்ற படங்களில் நடித்தார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதால் முன்னணி இயக்குனரின் மகனாக இருந்தும் கூட, பட வாய்ப்பு இல்லாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.
பாரதி ராஜாவுக்காக மனோஜ் செய்த தியாகம்; 24 வருஷம் கழித்து அவராலேயே நிறைவேறிய கனவு!
மனோஜ் பாரதிராஜா, சாதுரியம் என்கிற திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் ஹீரோயினான நந்தனாவை காதலித்து, அவரையே திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய காதல் கதையை மனோஜ் நேர்காணல் ஒன்றில் கூறிய நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.
இது பற்றி அவர் கூறுகையில், "சாதுரியன் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஒரு வீட்டில் தான் நடந்தது. படத்தின் ஹீரோயினை இயக்குனர் எனக்கு அறிமுகம் செய்து வைப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மற்ற வேளைகளில் பிசியாக இருந்தார். பின்னர் நான் திரும்பிப் பார்க்கும்போது நந்தனாவை பார்த்ததுமே அவர் மீது காதல் வந்துவிட்டது.
பின்னர் இருவரும் கட்டிலில் அமர்ந்து பேசுவது போன்ற ஒரு காட்சியை இயக்குனர் படமாக்கினார். அப்போது நான் நந்தனா மீது கை போட மிகவும் தயங்கினேன். 4 - 5 டேக் போன பின்னர், உங்களுக்கு என் மீது கை போட ஏதாவது சங்கடமா இருக்கா என கேட்டு, எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நடிக்குமாறு சொன்னார். ஆனால் நான் தயங்கிய விஷயம் தான் என்னிடம் அவருக்கு பிடித்தது என்பது எனக்கே தெரியாமல் போனது.
சேதுராமன் முதல் மனோஜ் பாரதிராஜா வரை; இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்!
நான் தயங்கி தயங்கி அவர் மீது கை போட்டு நடித்தது அவருக்கு என் மீது காதலை வரவைத்து. இறுதி கட்ட படப்பிடிப்பின் போது நான் அவரை அதிகம் காதலிக்க துவங்கி விட்டேன். பின்னர் அவருக்கும் என் மீது காதல் இருந்தது புரிந்து கொள்ள முடிந்தது. கடைசி நாள் ஷூட் அன்று அவர் என்னை கண்ணீருடன் திரும்பி பார்த்துவிட்டு சென்றார். பின்னர் இருவரும் எப்போது பார்ப்போம் என ஏங்கினோம். மெசேஜ் மற்றும் போனில் பேச தொடங்கினோம். அப்படியே திருமணத்திலும் எங்களுடைய காதல் கதை முடிந்தது எனக் கூறியுள்ளார்.