Pandian Stores: குமரனுக்கு கல்யாணத்துக்கு ஐடியா கொடுத்த சக்திவேல்; ஆப்பு வைத்த கோமதி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 438ஆவது எபிசோடானது பாண்டியனை குத்திக்காட்டுவதும், முத்துவேலுவிடம் கோமதி உத்தரவாதம் கேட்பதுமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 438ஆவது எபிசோடானது பாண்டியனை குத்திக்காட்டுவதும், முத்துவேலுவிடம் கோமதி உத்தரவாதம் கேட்பதுமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கடந்த சில நாட்களாக காதல் தொடர்பான காட்சிகளால் குடும்பங்களுக்கு இடையில் சண்டை, மோதல் ஏற்பட்டது. இதனால், இரு வீட்டார் குடும்பத்தினரும் நிலைகுலைந்து போய்விட்டனர். இதில், கூடுதலாக பாதிக்கப்பட்டது பாண்டியனும் அவரது குடும்பத்தினரும் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 438ஆவது எபிசோடில் பாண்டியனை வம்புக்கு இழுத்த சக்திவேலுவை தனக்குரிய ஸ்டைலில் பழனிவேல் பதிலடி கொடுத்தார்.
பாண்டியன் மற்றும் பழனிவேல் இருவரும் வெளியில் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், எங்கு போறோம் என்று வீட்டில் சொல்லவில்லை. எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து அரசிதான் இந்த வீட்டிற்கு மருமகளாக வர வேண்டும். நீ என்ன செய்வீயோ, ஏதோ செய்வீயோ தெரியாது, ஆனால், அரசி தான் இந்த வீட்டிற்கு மருமகளாக வர வேண்டும் என்றும், பேசாமல் இருந்த அரசியை படத்திற்கு கூட்டி செல்ல தைரியமும், துணிச்சலும் இருந்த உனக்கு அவளை இந்த வீட்டு மருமகளாக்க முடியாது என்று குமரவேலுவை தூண்டிவிடுகிறார் சக்திவேல்.
அடுத்த காட்சியாக கோமதி தனது அண்ணனான முத்துவேலுவிடம் தன்னுடைய மகளின் வாழ்க்கைக்காக உத்தரவாதம் கேட்கிறார். தன்னுடைய மகளால் உங்களது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராது என்றும், அதே போன்று குமாரவேலுவால் தனது மகளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. என்னதான் சண்டையாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நீ விளையாடமாட்ட என்பது எனக்கு தெரியும்.
அது போன்றுதான் நடந்து கொள்ள வேண்டும். என்னை நீ என்ன வேண்டுமானாலும் அடி, கொலை கூட செய்து கொள் ஆனால், தனது கணவரையும், குடும்பத்தையும் எதுவும் செய்ய வேண்டாம் என்று கதறுகிறார். அதற்கு முத்துவேல் இனிமேல் குமாரவேலுவால் உன்னுடைய மகளுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று முத்துவேல் வாக்கு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி குமாரவேலுவிற்கு மதுரையில் பெண் பார்த்திருப்பதாகவும், அதற்காக நாம் மதுரைக்கு செல்ல வேண்டும் என்றும் சக்திவேலுவிடம் கூறுகிறார். ஏற்கனவே அந்த பெண் வீட்டாரிடம் நான் பேசி வைத்திருந்தேன், அப்போது அந்த பெண் படித்துக் கொண்டிருந்தாள். இப்போது அதற்கு அவசியம் இல்லை என்று கூறுகிறார். அதற்கு சக்திவேலுவோ தாம் தூம் என்று குதிக்கிறார். தன்னிடம் எதுவும் சொல்லவில்லை, அப்படி இப்படி என்று பேசுகிறார்.
அதற்கு மாரியோ, முதலில் பெண் பார்க்கவில்லை என்று சொன்னீங்க, இப்போ பெண் பார்த்ததை சொல்லவில்லை என்று சொல்றீங்கள் என்று சத்தம் போடுகிறார். இறுதியாக அரசிக்கு போன் வருகிறது. அதை எடுத்து பேசிய கோமதி, இனிமேல் அரசி காலேஜூக்கு வரமாட்டாள் என்று சொல்லி போனை கட் செய்கிறார். அவள் படிச்சு கிழிச்சது போதும். இனிமேல் அவள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று கோமதி பேசுகிறார். எப்படியும் காலேஜில் அரசியை பார்க்க திட்டம் போட்ட குமரனுக்கு ஆப்பு வைத்தது போல் இருக்கிறது. இதை தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.