தீராத துயரம்; கண்ணீரோடு விடைகொடுத்த குடும்பத்தினர் - தகனம் செய்யப்பட்டது மனோஜ் உடல்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகனான, மனோஜ் பாரதிராஜா நேற்று மாலை 6 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தின் தகனம் செய்யப்பட்டது.
 

Manoj Bharathi Raja Last rites and cremation mma

48 வயதே ஆகும் இயக்குனர் மற்றும் நடிகர் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு, திரையுலகினர் மத்தியில் தீரா சோகத்தை ஏற்படுத்தியது. இவருக்கு கடந்த வாரம், ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென நேற்று நெஞ்சு வலிப்பதாக கூறி கீழே சரிந்து விழுந்தார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது:

உடனடியாக மனோஜை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் செல்லும் வழியிலேயே, இவருடைய உயிர் பிரிந்தது. இந்த தகவல் வெளியான போது, பலரும் பதறிப் போன நிலையில் இந்த செய்தி வதந்தியாக இருக்கக் கூடாதா?  என நினைத்தனர். ஆனால் இந்த செய்தி மெய்யாக்கிப் போனது தான் பலரின் வருத்தம்.

மகனின் மறைவால் உடைந்துபோன பாரதிராஜா; ஆறுதல் சொல்ல படையெடுத்து வந்த பிரபலங்கள்!


கிசுகிசுவிலும் சிக்காத சிறந்த மனிதர்:

இத்தனை வருட திரை உலக பயணத்தில், எந்த ஒரு சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்காத சிறந்த மனிதர், மனித நேயம் மிக்கவர் என பெயரிடுத்த மனோஜ் பாரதிராஜாவுக்கு, திரையுலகமே கூடி வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். அதேபோல் ரஜினிகாந்த், டி ராஜேந்திரன், உள்ளிட்ட பாலர் அறிக்கைகள் மூலம் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.

மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

மேலும் கருணாஸ், கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் மணிரத்தினம், நாசர், பி வாசு, நடிகர் விதார்த், கவுண்டமணி, செந்தில், ராதிகா, சரத்குமார், ராதா, ஸ்டாலின் முத்து, சந்தான பாரதி, கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, கார்த்தி, தளபதி விஜய், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரடியாக வந்து மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி தன்னுடைய ஆறுதலை பாரதி ராஜாவுக்கும் - அவருடைய குடும்பத்திற்கும் தெரிவித்தனர்.

சேதுராமன் முதல் மனோஜ் பாரதிராஜா வரை; இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்!

பெசன்ட் நகர் மின் மயானத்தின் உடல் தகனம்

மேலும் மு க ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார்.  இதைத்தொடர்ந்து வீட்டில் இறுதி குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, வேன் மூலம் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட மனோஜ் பாரதிராஜாவின் உடல் அங்கும் இறுதி சடங்கு மற்றும் சாங்கியங்கள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.

மின் மயானம் வரை வந்து, வெற்றிமாறன், சீமான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் பாரதி ராஜா நடக்க முடியாமல் வந்து தன்னுடைய மகன் மனோஜ் பாரதி ராஜாவுக்கு கண்ணீரோடு விடைகொடுத்துள்ளார்.  தீராத துயரத்துடனும் மனோஜின் உடல் தகனம் செய்யப்பட்டு காற்றோடு கரைந்துள்ளது.

Latest Videos

vuukle one pixel image
click me!