மேஷ ராசிக்கான 2025 சனி பெயர்ச்சி பலன்; வரவைக் காட்டிலும் செலவு கூடும்; பண பற்றாக்குறை ஏற்படும்!

Sani Peyarchi 2025 Mesha Rasi Palan in Tamil Predictions : மார்ச் 29ஆம் தேதி நிகழும் சனி பெயர்ச்சி மேஷ ராசிக்கு ஏழரை சனியாக ஆரம்பமாகிறது. அடுத்து ஏழரை வருடங்கள் மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். மேஷ ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sani Peyarchi 2025 Mesha Rasi Palan in Tamil Predictions rsk

Sani Peyarchi 2025 Mesha Rasi Palan in Tamil Predictions : இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகக் கூடிய கிரகம் சனி பகவான். இவரை நீதிமான் என்றும், மந்தக் காரகன் என்றும் அழைப்பார்கள். மந்தக் காரகன் என்றால் மெதுவாக பயணிப்பவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்வார். இந்த இரண்டரை வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் சனி வக்ரம் ஆவதும், சனி வக்ர நிவர்த்தி அடைவதும் நிகழும்.

Sani Peyarchi 2025 Mesha Rasi Palan in Tamil Predictions rsk
2025 Saturn Transit Aries, Aries Sani Peyarchi Palan

நீதிமான் என்றால் வாத்தியார். தப்பு செய்வதர்களுக்கு அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். ஆனால், நாம் செய்த பாவங்களுக்கு தான் நமக்கு பலன் கிடைக்கிறது என்றும், செய்த தவறுகளுக்கு தான் நமக்கு தண்டனை கிடைக்கிறது என்றும் நாம் புரிந்து கொள்ளமாட்டோம். அதற்குப் பதிலாக கஷ்டம் கஷ்டம் என்று புலம்பிக் கொண்டிருப்போம். ஏறாத கோயில் படிகள் இருக்காது, பார்க்காத ஜோதிடர் இருக்கமாட்டார். ஆனால், நாம் தப்பு செய்வதை நிறுத்தமாட்டோம்.


Mesha Rasi Sani Peyarchi Palan 2025

சனி பகவானைப் பொறுத்த வரையில் அடுத்தவர்கள் மனதை காயப்படுத்தாமல், தன்னால் முடிந்த வரையில் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்து வந்தாலே போதும். சனி பகவான் உங்களை ஒன்றுமே செய்யமாட்டார். 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி இரவு 10.07 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். உண்மையில், ஜோதிடம், ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு சனி பெயர்ச்சியானது 3 மாதங்களுக்கு முன்னரே தனது தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியிருப்பது புரியும்.

Saturn Transit 2025 Palan in Tamil

ஏனென்றால் சனி பெயர்ச்சி இப்போது இல்லை, அடுத்த வருடம் தான் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது நாம் பின்பற்றுவது திருக்கணித பஞ்சாங்கம். அப்படி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 29ஆம் தேதி இரவு 10.07 மணிக்கு சனி பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த சனி பெயர்ச்சி மேஷ ராசிக்கு ஏழரை சனியாக ஆரம்பமாகிறது.

Saturn Transit 2025 Mesha Rasi, Mesham 2025 Sani Peyarchi Palan

ஏழரை சனியால் மேஷ ராசியினர் அனுபவிக்க கூடிய பலன்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். மேஷ ராசிக்கு 10 மற்றும் 11ஆவது வீடுகளுக்கு அதிபதி சனி பகவான். அவர் இப்போது 12 ஆம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதனால், மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. 12ஆவது வீட்டிற்கு வரும் சனி பகவான் உங்களது 2, 6 மற்றும் 9ஆவது வீடுகளை பார்க்கிறது. இதன் மூலமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். உங்களது நீண்ட கால ஆசைகள் யாவும் நிறைவேறும்.

Saturn Transit in Pisces 2025 Palan, Sani Peyarchi 2025, Astrology

எனினும், வருமானத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகமாகவே இருக்கும். பொருளாதாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். கண் தொடர்பான பிரச்சனைகள், காலில் காயங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்வது நன்மை அளிக்கும். காரில் சென்றால் சீட் பெல்ட் அணிந்து பயணிக்கவும்.

Horoscope, Zodiac Signs, Mesha Rasi

வெளிநாட்டு பணம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது வெளிநாட்டில் வேலையோ, வெளிநாட்டு வியாபாரமோ செய்து அதன் மூலமாக வருமானம் வரக் கூடிய சூழல் இருக்கிறது. ஏழரை சனியின் முதல் இரண்டரை ஆண்டுகள் விரையச் சனி என்பதால் எவ்வளவு வருமானம் வந்தால் எப்படி செலவாகிறது என்றே உங்களுக்கு தெரியாது. வருமானத்தை சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மேஷ ராசிக்கு இந்த ஏழரை காலம் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள கூடிய அனுபவத்தை பெற்று தரும்.

Aries Zodiac Signs, Aries 2025 Horoscope

சனி பெயர்ச்சி 2025 காலகட்டத்தில் மேஷ ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரம்:

  1. சனிக்கிழமை தோறும் கருப்பு நிற உடை அணிந்து காலில் காலணி இல்லாமல் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முதலில் விநாயகர் வழிபாடு அதன் பிறகு மூலவர் இறுதியாக சனி பகவான் வழிபாடு இப்படி வழிபாடு செய்ய வேண்டும்.
  2. ஒவ்வொரு சனிக்கிழமையும் துப்புரவு பணியாளர்களுக்கு காலனி, குடை, சாப்பாடு வாங்கி கொடுக்கலாம்.
  3. ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.
  4. சனியின் தாக்கம் என்றாலே விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மறந்துவிடக் கூடாது.
Mesha Rasi Sani Peyarchi 2025 Palan in Tamil
  1. தகுதியான ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற்று, நீலக்கல் மோதிரம் அணிந்து கொள்ளலாம்.

  2. சனி பகவானுக்குரிய மந்திரங்களை முறைப்படி சொல்ல வேண்டும்.

  3. ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து சனி பகவானுக்கு எண்ணெய் சாற்றவும்.

  4. அமாவாசை திதியில் தொழுநோயாளிகளுக்கு எண்ணெயில் செய்த உணவு கொடுக்க வேண்டும்.

  5. கருப்பு நிறம் கொண்ட நாய்க்கு பிஸ்கட், சாப்பாடு கொடுக்கலாம்.

  6. நாள்தோறும் காகத்திற்கு சாப்பாடு வைக்க வேண்டும்.

Latest Videos

vuukle one pixel image
click me!