சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன்:
நேற்றைய தினம் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே தற்போது திரையுலக குடும்பத்தில், நிகழ்ந்துள்ள மற்றொரு மரணமாக இது பார்க்கப்படுகிறது.
'சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன்", என்கிற இயற்பெயரை தான் எஸ்.எஸ். ராஜேந்திரன் என சுருக்கி வைத்து கொண்டார். நாடக நடிகராக இருந்து பின்னர் கலைஞர் மு கருணாநிதி, கதை - வசனம் எழுதிய 'பராசக்தி ' திரைப்படத்தின் மூலம் 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடிகராக திரை உலகில் அறிமுகமான இவர், அதன் பின்னர் கருணாநிதியின் 'என் அம்மையப்பன்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பட்ட பெற்றார். ஆனால் இந்த படம் வெற்றிபெறாத நிலையில், பல படங்களில் சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார்.