சில்க் ஸ்மிதாவுக்காக முன்னணி நடிகையை ஓரங்கட்டிய சிரஞ்சீவி! நடந்தது என்ன?
80, 90களில் சில்க் ஸ்மிதாவுக்கு டோலிவுட்டில் அதிக வரவேற்பு இருந்தது. முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு இணையாக சில்க் ஸ்மிதாவுக்கு அப்போது மவுசு இருந்தது.
80, 90களில் சில்க் ஸ்மிதாவுக்கு டோலிவுட்டில் அதிக வரவேற்பு இருந்தது. முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு இணையாக சில்க் ஸ்மிதாவுக்கு அப்போது மவுசு இருந்தது.
புகழின் உச்சத்தில் சில்க் ஸ்மிதா:
80, 90 களில் சில்க் ஸ்மிதாவுக்கு டோலிவுட்டில் அதிக வரவேற்பு இருந்தது. முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு இணையாக சில்க் ஸ்மிதாவுக்கு அப்போது மவுசு இருந்தது. அவர் கவர்ச்சியாக நடித்தார். பல படங்களில் அவரை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்தனர். ஒரு பாடலில் மட்டுமாவது ஆடவைத்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அந்தக் காலத்தில் சில்க் ரொம்ப பிசியாக இருந்தார். சில சமயங்களில் அவருடைய கால்ஷீட் கிடைப்பதும் கடினமாக இருந்தது.
ஷூட்டிங்கிற்கு வராத சில்க் ஸ்மிதா:
சிரஞ்சீவியின் ஆரம்பகால வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹிட் படம் சேலஞ்ச். இந்த படத்தில் சுஹாசினி, விஜயசாந்தி ஹீரோயின்களாக நடித்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதாவும் நடித்தார். சில்க் ஸ்மிதா, சுஹாசினி விஷயத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. சிரஞ்சீவி, சில்க் ஸ்மிதா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இயக்குனர் கோதண்ட ராமி ரெட்டி திட்டமிட்டார். ஆனால் ஸ்மிதா பிஸியாக இருந்ததால் வரவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு, தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று ஸ்மிதா தயாரிப்பாளர்களுக்கு திடீரெனத் தெரிவித்தார். அதே நாளில் சிரஞ்சீவிக்கும், சுஹாசினிக்கும் இடையே காட்சிகள் படமாக்கப்பட இருந்தது, இதனால் தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிரஞ்சீவியுடன் கலந்துரையாடிய பிறகு, சுஹாசினியின் காட்சிகளை ரத்து செய்தார்களாம். அன்று படப்பிடிப்புக்கு வர வேண்டாம் என்று சுஹாசினியிடம் சொன்னார்களாம்.
தன்னை விட கவர்ச்சி வேடங்களில் நடிக்கும் நடிகைக்கு சிரஞ்சீவி அதிக முக்கியத்துவம் கொடுத்ததை சுஹாசினியால் ஜீரணிக்க முடியவில்லை. சில்க் ஸ்மிதாவின் படப்பிடிப்பு முடிந்த பிறகும் சுஹாசினி சில நாட்கள் படப்பிடிப்புக்கு வரவில்லை. தனக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் சுஹாசினி பழிவாங்கியதாக செய்திகள் வந்தன.