நடிகையுடன் காதல்... சிவகார்த்திகேயன் பற்றி தனுஷ் கொளுத்திப்போட்ட கிசுகிசு..!

First Published | Aug 14, 2024, 11:41 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோயின் ஒருவரை காதலிப்பதாக நடிகர் தனுஷ் பழைய பேட்டியில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகிறது.

sivakarthikeyan, Dhanush

திறமையாளர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்குவதில் நடிகர் தனுஷ் கெட்டிக்காரர். இன்று தமிழ் திரையுலகில் டாப் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் தொடங்கி இன்று பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் ராயன் படத்தின் வாட்டர் பாக்கெட் பாடலை எழுதிய கானா காதர் வரை அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் ஏராளம். அந்த வரிசையில் மிகவும் முக்கியனவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயனை வெள்ளித்திரையில் ஜொலிக்க வைத்தது தனுஷ் தான்.

Sivakarthikeyan

தனது 3 படத்தில் சிவாவை காமெடியனாக நடிக்க வைத்த தனுஷ், அதன்பின்னர் அவரை தன்னுடைய தயாரிப்பில் ஹீரோவாகவும் நடிக்க வைத்து அழகுபார்த்தார். அப்படி தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று எஸ்.கே.வுக்கு மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. அதன்பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து இன்று டாப் ஹீரோவாக வலம் வருகிறார் சிவா.

Tap to resize

Dhanush vs sivakarthikeyan

தற்போதைய நிலவரப்படி தனுஷை விட சற்று கூடுதலாகவே சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், இயக்குனர் வினோத் ராஜை அறிமுகப்படுத்தி பேசுகையில், மற்றவர்களைபோல் நான் தான் இவங்கள அறிமுகம் செய்தேன் என போற இடமெல்லாம் சொல்லிக்காட்ட மாட்டேன் என கூறி இருந்தார். தனக்கு அதுபோல நடந்ததாகவும் அவர் சொல்லி இருந்தார். இதன்மூலம் தனுஷை தான் அவர் குத்திக்காட்டி பேசி இருக்கிறார் என சர்ச்சை வெடித்தது.

இதையும் படியுங்கள்... நான் அந்த மாதிரி ஆள் இல்ல... தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்? - கொட்டுக்காளி விழாவில் வெடித்த சர்ச்சை

dhanush Gossip about sivakarthikeyan

இந்த சர்ச்சை ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, சிவகார்த்திகேயன் பற்றி தனுஷ் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் சொன்ன கிசுகிசு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தொகுப்பாளினி டிடியிடம், மரியான் படத்தில் சிவகார்த்திகேயனை பற்றி நான் ஒரு கிசுகிசு சொல்லி இருப்பேன் அதை நீங்க கவனிச்சீங்களா என்று கேட்பார். அதற்கு டிடி அப்படியா அதை கவனிக்கவில்லையே, அது என்னனு சொல்லுங்க என கேட்க தனுஷும் அந்த கிசுகிசுவை கூறி இருக்கிறார்.

Dhanush Says sivakarthikeyan love with Poo Actress

மரியான் படத்தில் தந்தை பெயரும், மகன் பெயரும் கொண்ட நடிகருடன் பூ நடிகை காதலா என்று தான் பேசிய வசனம் சிவகார்த்திகேயனை பற்றியது தான் என கூறினார் தனுஷ். அவர் அந்த கிசுகிசுவை டிடியிடம் சொன்னபோது நடிகர் சிவகார்த்திகேயனும் அருகில் இருந்தார். தந்தை பெயரும், மகன் பெயரும் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தான் என தனுஷ் சொன்னாலும், அந்த பூ நடிகை யார் என்பதை கூறவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அது மரியான் படத்தில் உங்களுக்கு ஜோடியாக நடித்த பார்வதி தான என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கொட்டுக்காளி படத்துக்காக... அவுத்துபோட்டு கூட ஆட ரெடி - Vulgar பேச்சால் முகம் சுளிக்க வைத்த மிஷ்கின்

Latest Videos

click me!