தமிழ் திரையுலகில், பன்முக கலைஞராக அறியப்படும், டி. ராஜேந்தர்... இயக்கம் திரைப்படங்கள் அனைத்துமே குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களாக மட்டுமே இருக்கும். ஆபாசமான காட்சிகள், முத்த காட்சிகள், அத்துமீறிய காதல் காட்சிகள், என ரசிகர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்காது. இதன் காரணமாகவே, இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்று தற்போது வரை தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.