குல்பியை வைத்து நடிகையோடு கத்தி சண்டை போடும் கார்த்தி! 'பொன்னியின் செல்வன்' நடிகர்களின் ஃபன் டைம் கிளிஸ்க்!

First Published | Apr 19, 2023, 8:20 PM IST

பொன்னியின் செல்வன் பட புரோமோஷனின் தீவிரமாக ஈடுபட்டு வரும் படக்குழுவினர் குல்பியோடு ஃபன் செய்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வெளியாகி சுமார் 500 கோடி வசூல் சாதனை செய்தது.

இதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம்... இந்த மாதம் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த, இரண்டு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள், படு தூளாக நடந்து  வருகிறது.

திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்..!

Tap to resize

முதல் பாகத்திற்காக எப்படி இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் - நடிகைகள் ஊர்... ஊராக சென்று புரமோஷன் செய்தார்களோ, அதே போல் இரண்டாம் பாகத்திற்கான புரோமோஷன் சுற்று பயணத்தில் தீவிரமாக இறங்கி உள்ளது, படக்குழு.

சென்னை, கோயம்புத்தூரை தொடர்ந்து தற்போது டெல்லிக்கு 'பொன்னியின் செல்வன் 2' புரமோஷனுக்காக, நடிகர் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, சோபித துலிபாலா, உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டுள்ளனர். 

முன்னழகையும்... பின்னழகையும் மிடுக்காக காட்டும் கிக்கான அவுட் ஃபிட்டில்..! ரசிகர்களை மிரள வைத்த சமந்தா! போட்டோ

இந்நிலையில் புரோமோஷனுக்கு சென்ற இடத்தில், வெய்யில் தாங்க முடியாததால் என்னவோ... விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி, சோபிதா என அனைவருமே குளு குளுவென குல்பி சாப்பிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக... சோபிதாவும்... கார்த்தியும் குல்பியாலே கத்தி சண்டை போட்டுள்ளனர். இவர்களின் ஃபன் டைம் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 

Latest Videos

click me!