பல லட்சம் மதிப்பில்.. திருமண மண்டபம் போல் பிரமாண்ட வீடு கட்டிய விஜய் டிவி தீனா! வைரலாகும் கிரஹ பிரவேச போட்டோஸ்

First Published | Mar 16, 2023, 4:39 PM IST

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தீனா தற்போது, பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி, கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிருவதோடு, ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

ஒருவரை அழ தன்னுடைய காமெடியால் சிரிக்க வைப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல. அது ஒரு வரம் என்றே கூறலாம்... இப்படம் காமெடி வரம் கிடைத்த பலரை, சின்னத்திரையில் வெளிச்சம்போட்டு காட்டிய நிகழ்ச்சி தான் 'கலக்க போவது யார்'.

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலர், இன்று வெள்ளித்திரையும் முன்னணி காமெடி நடிகர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக, சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், புகழ், தீனா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்தே வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள்.

அம்மாவின் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... ஹீரோயின்களை மிஞ்சிய ஷாருக்கான் மகள் சுஹானா கான்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

Tap to resize

தீனாவை பொறுத்த  அவர் டைமிங் பதில் கொடுப்பதில் மன்னன். நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய 'பா.பாண்டி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடந்து, குற்றம் செய்யேல், லோகேஷ் கனகரஜின் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’, விஜய்யுடன் மாஸ்டர், என தற்போது திரையுலகில் படு பிசியாக நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தீனா... தற்போது தன்னுடைய புது வீட்டில் கிரஹப்பிரவேசம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பல லட்சம் ரூபாயில் சும்மா திருமண மண்டபம் போல், இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டியுள்ளார் தீனா. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது.

கைகூடாத காதல்... கமுக்கமாக கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஞ்சலி! மாப்பிள்ளை குறித்து கசிந்த தகவல்!

Latest Videos

click me!