தமிழ் சினிமாவில் 1969 ஆம் ஆண்டு வெளியான 'துணைவன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, பின்னர் தமிழ் திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாகவும் மாறியவர். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் தன்னுடைய கதாநாயகி பயணத்தை துவங்கிய ஸ்ரீதேவிக்கு, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்த '16 வயதினிலே' திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சில படங்களில் நடிக்கும் போது அதில் வரும் கதாபாத்திரங்கள் அவர்களின் அடையாளமாக மாறிவிடுவது போல் '16 வயதினிலே' படத்தில் நடித்த மயிலு கதாபாத்திரத்தையும் இன்றுவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு ஸ்ரீதேவியின் மயில் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.
முடிவுக்கு வருகிறதா இரண்டு விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல்கள்..?
அடுத்தடுத்து ரஜினி, கமல், ஆகிய இருவருடன் மட்டுமே பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற பெருமையை பெற்றவர். தமிழில் இவர் நடிப்பில் வெளியான சில சூப்பர் ஹிட் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இதையடுத்து வெளியான திரைப்படம் '16 வயதினிலே' இந்த படத்தில், ஸ்ரீ தேவி மயிலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது வரை, மயிலு என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத கதாபாத்திரமாக உள்ளது. 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை, இயக்குனர் பாரதிராஜா இயக்கி இருந்தார். இப்படத்திலும் கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து கமலஹாசன் உடன் நடித்த மீண்டும் கோகிலா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, போன்ற படங்கள் விமர்சனம் ரீதியாக மட்டும் இன்றி, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 80-களில் ஸ்ரீதேவி - கமல் காம்பினேஷன் தொடர்ந்து ஹிட் அடித்ததால், கிசு கிசுக்களும் வலம்வந்து.
sridevi hit movie
பாலிவுட் திரையுலகின் உள்ளே நுழைந்த பின்னர் தென்னிந்திய திரைப்படங்கள் நடிப்பதை தவிர்த்த நடிகை ஸ்ரீதேவி, பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, மும்பையிலேயே செட்டில் ஆனார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர் தமிழ் - ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் ரீ-என்ட்ரிகொடுத்தார் . இந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து சில படங்களில் ஸ்ரீதேவி நடித்தார்.