வாய்ப்பு தேடி அக்கட தேசத்தில் இருந்து, தமிழுக்கு வந்தவர் தான் இந்த அழகு நடிகை. தன்னுடைய சிரிப்பால் பல தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு, சமீப காலமாக இவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கைகொடுக்கும் என நம்பிய பிக்பட்ஜெட் படங்களில் சில நிமிடம் மட்டுமே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் காலை வாரியத்தால் அம்மணி லிஸ்டில் படமே இல்லாமல் வாஷ் அவுட் ஆகிவிட்டார்.