IPL 2023: முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் தமிழிசை, தனுஷ், அஜித் ஃபேமிலி என பிரபலங்களுடன் களைகட்டிய CSK vs SRH போட்டி

First Published | Apr 22, 2023, 12:23 AM IST

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த , ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் தமிழிசை, தனுஷ், அஜித்தின் குடும்பத்தினர், உள்ளிட்ட பல பிரபலங்கள் கண்டுகளித்த புகைப்பட தொகுப்பு இதோ...
 

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் போட்டிகள் தற்போது மிகவும், பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது.

இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே அபாரமாக தங்களின் ஆட்ட திறமையை வெளிப்படுத்தி,  ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி வாகை சூடினர்.

அட கடவுளே... நடிகர் விக்ரமுக்கு இப்படி நடந்ததா? அதை மறைச்சிட்டார்.. கொளுத்தி போட்ட பயில்வான்! பதறிய ரசிகர்கள்!

Tap to resize

இந்நிலையில் இன்றைய தினம், சிஎஸ்கே அணி, சன்ரைசர்ஸை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இந்த போட்டியை அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆர்வத்துடன் கண்டு களித்து வருகிறார்கள்.

குறிப்பாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, அமைச்சை அன்பில் மகேஷ் ஆகியோருடன் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தெரிவித்து இந்த போட்டியை பார்த்து ரசித்து வருகிறார். 

அடடா... அழகு ராட்சசியே! 40 வயதிலும்... பிரெஷ் ரோஜா போல் ரெட் ட்ரெஸ்ஸில்... கேரள ரசிகர்களை அசர வைத்த குந்தவை!

அதே போல் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜனும், சிஎஸ்கே vs சன்ரைசர்ஸை அணிகள் எதிர்கொண்டு ஆடிவரும், கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்து வருகிறார்.

அதே போல் நடிகர் தனுஷ், அஜித்தின் மனைவி, மகன், மகள்.. நடிகை பிரியங்கா மோகன், இயக்குனர் மோகன் ஜி, காமெடி நடிகர் சதீஷ், நடிகை சாக்க்ஷி அகர்வால், வெங்கட் பிரபு, நாக சைதன்யா, போன்ற ஏராளமான நடிகர் நடிகைகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குவிந்துள்ளனர். பெரும்பாலும் சிஎஸ்கே அணிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

சிட்டாடெல் பிரீமியரில் ... சமந்தா போட்டிருந்த உடை மற்றும் நகையின் மதிப்பு இத்தனை கோடியா! கேட்டாலே ஜெர்க் ஆகுதே

சிஎஸ்கே அணி முதல் 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியை வெறும் 134 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது சிஎஸ்கே அணி.
 

135 ரன்கள் என்ற எளிய இலக்கோடு  சிஎஸ்கே அணிக்கு களமிறங்கிய நிலையில்,  7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே  வெற்றிபெற்றது. 

அட கடவுளே... நடிகர் விக்ரமுக்கு இப்படி நடந்ததா? அதை மறைச்சிட்டார்.. கொளுத்தி போட்ட பயில்வான்! பதறிய ரசிகர்கள்!

Latest Videos

click me!