தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா. கடந்த ஜூன் மாதம் தான் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆகும் நிலையில், நேற்று தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் விக்னேஷ் சிவன்.
அதுமட்டுமின்றி இருவரில் ஒருவருக்கு குழந்தைப் பேறுக்கு தகுதியில்லாதவராக இருக்கும் பட்சத்தில், அவர்கள் திருமணமாகி 5 ஆண்டுகளைக் கடந்த பின்னர் தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்கிற விதிமுறையும் உள்ளது. அப்படி இருக்கையில் திருமணமான நான்கே மாதத்தில் நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது எப்படி என்கிற கேள்விகளும் எழுப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “21 வயது முதல் 36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். திருமணம் ஆகி, கணவரின் ஒப்புதலுடன் இதைச் செய்ய வேண்டும். நடிகை நயன்தாரா விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாரா என மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் மூலம் அவரிடம் விளக்கம் கேட்கப்படும்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் நயன்தாராவிடம் விரைவில் விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... வாடகைத் தாய் முறையில் நயன் - விக்கி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்! வாடகைத் தாய் என்றால் என்ன? - வாங்க பார்க்கலாம்