பொருளை கூவி விற்பது போல்..நல்ல படங்களை விற்க வேண்டியுள்ளது : திண்டுக்கல் லியோனி

Published : Oct 10, 2022, 01:36 PM IST

 ஐயர்கள் பிரியாணி கடை வைப்பது போல தான் இவர்கள் படம் எடுத்திருப்பது என திண்டுக்கல் ஐ லியோனி பேசியுள்ளர்.

PREV
13
பொருளை கூவி விற்பது போல்..நல்ல படங்களை விற்க வேண்டியுள்ளது : திண்டுக்கல் லியோனி
dindigul i leoni

DeSiFM திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’. இதில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், பிரேம், ஆர்ஜே பரத், சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆரோ வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபி காரா இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் பாடல்கள் எழுதியுள்ளார். இளையராஜா.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். DeSiFM சார்பில் ஜோசப் சேவியர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆர்.சி.ஐயப்பன், பி.கெளசல்யா, பிரனவ் பாண்ட் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்.

23
dindigul i leoni

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளரும், தமிழக பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் டாக்டர்.தனஞ்செயன், நடிகர் பாபு ஆண்டனி, எம்.எஸ்.எப்.எஸ்-ன் உலக தலைவர் பாதர் ஆபிரஹாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். இவர்களுடன் எம்.எஸ்.எப்.எஸ்-ன் பாதரியார்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

33
dindigul i leoni

மேடையில் படம் குறித்து பேசிய  திண்டுக்கல் லியோனி ; ஐயர்கள் பிரியாணி கடை வைப்பது போல தான் இவர்கள் படம் எடுத்திருப்பது. வெறுப்படைந்த ரசிகர்களுக்கு ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ புதிய அனுபவத்தை கொடுக்கும். நல்ல பொருளை கூவி விற்பது போல், நல்ல படங்களை நாம் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பேசியுள்ளார்.

அதேபோல நல்ல  சினிமாக்களை ஊடகங்கள் கொண்டாட தவறியதில்லை .என படத்தின் ’ இயக்குநர் ஜெயக்குமார் லாரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும்  நல்ல சிந்தனைகள், நல்ல கருத்துக்களை சொல்லும் படங்களை எடுக்க வேண்டும்என கூறியுள்ளார்.

click me!

Recommended Stories