தென்னிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்த பலரும் நிதி பற்றாக்குறையால் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் உயிரிழப்பது தொடர்கதை ஆகி வருகிறது. முன்னதாக நகைச்சுவை நடிகர் துளசி, நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கரன் உள்ளிட்டோரின் மரணம் பேராதிச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்களது உடல்நிலை குறித்து சோசியல் மீடியாவில் செய்தி பரவியதற்கு பிறகு தான் பலரின் உதவிகளும் கிடைத்தது. அந்த வகையில் தற்போது போண்டாமணி நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.
போண்டாமணி தற்போது மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதோடு பிரபல நடிகர் பெஞ்சமின் போண்டா மணிக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
23
ponda mani
இந்த நிலையில் ஓமந்தாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த தகவலையும் கேட்டறிந்து கொண்டார்.
பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருவதாகவும், நாளை முதல் டையாலிசிஸ் சிகிச்சை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு அவரது உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாகவோ சிறுநீரகம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தையும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.