இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 24 வருடங்களுக்கு பின் மீண்டும் கையில் எடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்தின் முதல் பாகத்தின் தாக்கம், தற்போது வரை ரசிகர்கள் மனதில் உள்ளதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் வேறு லெவலில் உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இயக்க துவங்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2019 ஆம் ஆம் ஆண்டு, ஆரம்பமான நிலையில், கமலுக்கு ஏற்பட்ட மேக்அப் அலர்ஜி, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, மற்றும் கொரோனா பிரச்சனை போன்ற சில காரணங்களால்... தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகிக்கொண்டே சென்ற நிலையில், இயக்குனர் ஷங்கர், பிரபல தெலுங்கு நடிகர் ராம் சாரணை வைத்து, RC15 என்கிற இன்னும் பெயரிடாத படத்தை இயக்க துவங்கினார்.
மேலும் செய்திகள்: செம்ம கூல்... 'துணிவு' செகண்ட் லுக்கில் மரண மாஸாக இருக்கும் அஜித்..!
'இந்தியன் 2' படத்தை முடித்து கொடுக்காமல், வேறு படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குவதால், லைகா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இருதரப்பிற்கும் இடையே இருந்த பிரச்சினைகள், சுமூகமாக பேசி முடிக்கப்பட்ட நிலையில்... மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு, சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக பூஜை போட்டு ஆரம்பமானது. விரைவில் இதில் கமலஹாசன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று செம்ம ஸ்டைலிஷான லுக்கில், தாடியெல்லாம் மழித்து விட்டு... 'இந்தியன் 2' படத்தில் இணைந்துள்ளார்.