Published : Sep 22, 2022, 12:18 PM ISTUpdated : Sep 22, 2022, 12:48 PM IST
சூரி சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விபத்திற்கு உள்ளாகியுள்ளார் இருந்தும் சற்றும் அசராத சூரி மருத்துவமனைக்கு சென்று திரும்பிய உடனேயே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சூரியாக வந்து இன்று நாயகனாக உருவெடுத்துள்ளார் நடிகர் சூரி. முன்னணி நடிகளுக்கும் நண்பனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூரி தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் சூரி போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து வருவது குறித்து முன்னதாக போஸ்டரை வெளியிட்டு இருந்தது படக்குழு.
24
viduthalai shooting spoot
நீண்ட காலமாக படபிடிப்பில் இருந்து வரும் இந்த படத்திற்கான பெரும்பகுதி திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் முடித்துள்ளது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள விடுதலை நாயகன் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே இந்த படத்திற்காக சிக்ஸ்பேக் உள்ளிட்ட உடல் மாற்றங்களை கடுமையான முயற்சியின் மூலம் ஏற்படுத்தியுள்ள சூரி, தற்போது ஜாக்கிசான் அளவிற்கு பறந்து பறந்து சண்டை செய்திருந்தது குறித்து ஏற்கனவே நமது ஏசியாநெட் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
தற்போது அவ்வாறு அவர் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விபத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் கை மற்றும் கால்களில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தும் சற்றும் அசராத சூரி மருத்துவமனைக்கு சென்று திரும்பிய உடனேயே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.. இது குறித்து சமீபத்தில் ஷெட்யூல் முடிந்தது குறித்து படக்குழு வெளியிட்டிருந்த புகைப்படமம் உறுதி செய்துள்ளது. அதில் சூரி தனது கையில் கட்டுடன் காணப்படுகிறார்.
தனது நாயகன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள சூரி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பது குறித்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது அந்த இடத்தில் குழுமி இருந்த படப்பு குழுவினரும் அந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டனர். இந்த படத்திற்கு பாகுபலி, அசுரன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்த பீட்டர் ஹெயின் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இளையராஜா இசையமைப்பில் இதில் நாயகியாக ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜூமேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.