விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரு படங்களைத் தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு கூட்டணிகள் உருவாகிய வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளை நிரப்பியது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக பிரம்மாண்ட நிகழ்ச்சியின் மூலம் இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக ஹெலிகாப்டரில் வந்து மாஸ் காட்டி இருந்தார் சிம்பு.
24
Vendhu Thanindhathu Kaadu
ஐசிரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரே ஜெயண்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் வெளியிட்டு இருந்தது. முத்து என்கிற இளைஞன் பிழைப்புக்காக மும்பை செல்கிறான். கேங்ஸ்டர்களால் துன்புறுத்தப்படும் நாயகன் பின்னர் தானே கேங்ஸ்டாராக உருவெடுக்கும் கதையை கொண்டிருந்தது. இதனால் இப்படத்தில் சற்று சண்டை காட்சிகள் குறைவாக இருந்ததாகவே ரசிகர்கள் கூறி வந்தனர்.
முன்னதாக இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இதன் இரண்டாம் பாகத்தை நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தனது முதல் படத்தில் சண்டை காட்சிகள் குறைவாக இருந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள சிம்பு. அந்த படத்தில் முத்து எப்படி கேங்ஸ்டர் ஆனார் என்பது குறித்து இருந்ததால் சண்டைக்காட்சிகள் குறைவாக இருந்ததாகவும், இரண்டாம் படத்தில் கேங்ஸ்டர் ஆக வரும் நாயகனின் ஆக்சன் மற்றும் மாஸ் காட்சிகள் அதிகமாகவே இருக்கும் என கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இதனால் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு இப்பொழுது இருந்தே துவங்கி விட்டது. படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது.இந்த படத்தில் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.