சூர்யாவின் இறுதி வெளியீடாக எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பான இந்த படத்தில் சமீபத்திய சமூக இன்னல்களில் ஒன்றான பெண்கள் குறித்தான முக்கிய கருத்துகள் பேசப்பட்டு இருந்தது. படம் ரசிகர்களை நல்ல முறையில் சென்றடைந்தது.
25
Suriya
முன்னதாக இவர் நடித்திருந்த சூரரை போற்று, ஜெய் பீம் உள்ளிட்டவை பலத்த வரவேற்பையே பெற்றது. அதோடு உலகநாயகனின் விக்ரமில் ரோலாக்ஸாக வந்து மாஸ் காட்டினார் சூர்யா. மேலும் ஒரு மகுடமாக சமீபத்தில் தான் சூரரை போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தை தயாரித்து நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிட்டியது.
தற்போது இவர் பாலாவுடன் வணங்கான், சிறுத்தை சிவா உடன் ஒரு படம், வெற்றிமாறனின் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வரும் வாடிவாசல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யா வரலாறு சார்ந்த ஒரு கதைக்களத்தை கையில் எடுத்து இருப்பதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த படத்தை பிரம்மாண்ட படைப்புகளுக்கு பேர் போனா இயக்குனர் சங்கர் தான் இயக்குகிறார். மதுரை எம்பி வெங்கடேசனின் வேள்பாரி நாவலைத் தழுவி உருவாகும் இந்த படத்தில் சூர்யா நாயகன் வேட்பாரியாக நடிக்க உள்ளாராம். முன்னதாக விருமன் பட விழாவில் சு வெங்கடேசன் உடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி வருவதாக சூர்யா பேசுகின்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவரது சகோதரர் கார்த்தி பொன்னியின் செல்வனில் மிக முக்கிய ரோலில் நடித்த வருகிறார். மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வம் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இதில் கார்த்தியின் ரோல் மிகவும் எதிர்பார்க்கத் தக்க வரலாற்று சுவை பொதிந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில் மன்னர்கள் சார்ந்த கதைகளத்தை சூர்யாவும் கையில் எடுத்திருப்பது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் அழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.