சிறுமலை காட்டிற்குள் ஆக்ஷனில் அதிரடி காட்டிய விஜய் ஆண்டனி..! வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!

Published : Sep 22, 2022, 02:23 PM IST

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில்,  விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும், 'வள்ளி மயில்' திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டிற்குள் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு எடுத்து வருகிறார்கள்.  

PREV
14
சிறுமலை காட்டிற்குள் ஆக்ஷனில் அதிரடி காட்டிய விஜய் ஆண்டனி..! வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, சுசீந்திரன் இயக்கத்தில், நடித்து வரும் திரைப்படம் 'வள்ளி மயில்'. இந்த திரைப்படம், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி, தற்போது சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.  

24

1980 களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான  டிராமா திரில்லராக இத்திரைப்படம் உருவாகிறது. 1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில், 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. 

மேலும் செய்திகள்: இந்தியன் 2 படத்திற்காக மிரட்டல் லுக்கிற்கு மாறிய கமல்..! படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!
 

34

தற்போது சிறுமலையின் காட்டுப்பகுதியில் ஒரு பழமையான கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி நாயகி பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் பங்கு கொண்டு நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

44

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு -  விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் - ஆண்டனி, கலை இயக்கம் டைரக்டர் - உதயகுமார், இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த முன்னர், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு,  படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: செம்ம கூல்... 'துணிவு' செகண்ட் லுக்கில் மரண மாஸாக இருக்கும் அஜித்..!
 

Read more Photos on
click me!

Recommended Stories