'அந்த' ஒரு பாடலுக்காக எஸ்.பி.பி.க்காக காத்திருந்த எம்.ஜி.ஆர்; என்ன பாடல் தெரியுமா?

First Published | Dec 5, 2024, 10:17 AM IST

அடிமைப்பெண் படத்தில் பாடுவதற்காக எஸ்.பி.பி.யின் உடல்நிலை சரியாகும் வரை எம்.ஜி.ஆர் காத்திருந்துள்ளார். 
 

MGR and S. P. Balasubrahmanyam

தமிழக திரையுலகில் எத்தனையோ பின்னணி பாடகர்கள் வந்து கோலோச்சியுள்ளனர். ஆனால் இதில் தனித்து நின்று மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தனது காந்த குரலால் மக்கள் மனங்களை வசியப்படுத்திய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக திரையுலகில் சாதித்துக் காட்டியவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி நம்மை பிரம்மிக்க வைத்தவர். எஸ்.பி.பி பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. நமது மனதை வருடக்கூடியவை. இன்றும் பலரது செல்போன்களில் எஸ்.பி.பி பாடல்கள் ரிங்டோன்களாக உள்ளன. 

MG Ramachandran

இப்போது தமிழ் திரையுலகில் பாடகர்கள் ஒரு படத்துக்காக ஒரே நாளில் 2க்கும் மேற்பட்ட பாடல்களை பாடுவதே அரிதாகி விட்டது. ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் வெளியான திரைப்படங்களில் பாடல்கள் அதிகமாக இருக்கும். இதனால் பாடகர்கள் ஒரே நாளில் 10க்கும் அதிகமான பாடல்களை பாடுவது வழக்கம். 

இதில் அனைவரையும் மிஞ்சும்விதமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 12 மணி நேரத்தில் 21 பாடல்களை பாடி அசத்தியுள்ளார். 1969ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான அடிமைப்பெண் திரைப்படம் பட்டியொட்டி எங்கும் ஹிட் ஆனது.

புஷ்பா 2 படம் பார்க்க குடும்பத்தோடு வந்த ரசிகைக்கு நேர்ந்த துயரம்: சந்தியா தியேட்டரில் நடந்தது என்ன?

Tap to resize

S. P. Balasubrahmanyam

இந்த படத்தில் பாடுவதற்காக எஸ்.பி.பி.க்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். ஆனால் டைபாய்டு காய்ச்சல் வந்து விட்டதால் எஸ்.பி.பி.யால் உடனடியாக பாட முடியவில்லை. புரட்சித் தலைவர் படத்தில் பாட முடியவில்லையே என வேதனையில் தவித்துள்ளார் எஸ்.பி.பி. இதனை அறிந்த எம்.ஜி.ஆர் எஸ்.பி.பியின் உடல்நிலை சரியாகும் வரை காத்திருந்துள்ளார்.

பின்பு உடல்நிலை சரியானதும் அடிமைப்பெண் படத்தில் அவர் பாடிய பாடல்தான் 'ஆயிரம் நிலவே வா.'. இதுதான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும். இந்த பாடலை பின்னணி பாடகி சுசீலாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி. அடிமைப்பெண் வெளியானதே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இன்றளவும் இந்த பாடலை கேட்கும்போது அவ்வளவு இனிமையாக இருக்கும்.

Actor MGR

இதனைத் தொடர்ந்து எஸ்பிபியின் திறமையை அறிந்த எம்.ஜி.ஆர், தான் நடிக்கும் படங்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார். அந்த காலத்தில் மாபெரும் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.ஜி.ஆர், எஸ்.பி.பிக்கு காத்திருந்து வாய்ப்பு வழங்கியது பெரிதாக பார்க்கப்படுகிறது.

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயமாக சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற 'இயற்கை என்னும் இளைய கன்னி..' எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும். ஆனால் இந்த பாடல் வெளியாவதற்கு முன்பே 'ஆயிரம் நிலவே வா.'. பாடல் வெளியாகி விட்டதால் இதுவே அவர் பாடிய முதல் பாடலாக சொல்லப்பட்டு வருகிறது.

தங்க ஜரி காஞ்சிபுர பட்டில் சோபிதா - வேஷ்டி சட்டையில் சைதன்யா; பாரம்பரிய உடையில் நடந்த திருமணம்!

Latest Videos

click me!