Published : Dec 05, 2024, 09:11 AM ISTUpdated : Dec 05, 2024, 10:58 AM IST
Allu Arjun Pushpa 2 Movie Screening Sandhya Theatre Women Killed : புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கிற்கு தனது குடும்பத்தோடு சென்ற ரசிகரை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Rashmika Mandanna, Allu Arjun Pushpa 2 Movie Review
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தான இருவரும் முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் புஷ்பா 2 தி ரூ. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், மிகுந்த நம்பிக்கையுடனும் இன்று வெளியாகியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே ஓடிடி, திரையரங்கு உரிமை என்று ரூ.1000 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது.
27
Allu Arjun, Pushpa 2 The Rule Movie Review
இன்று டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று ஒட்டு மொத்தமாக சினிமா உலகை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையிலும் புஷ்பா 2 இன்று வெளியாகியிருக்கிறது. தமிழில் இப்போதைக்கு பெரிய படம் எதுவும் இல்லாத நிலையில் புஷ்பா 2 படம் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் புஷ்பா 2 வெளியாக இருக்கிறது. ஆனால், மற்ற மொழிகளில் அதிகாலை ஷோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
37
Pushpa 2 Box Office Collection, Pushpa 2 Pre Release Sales
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அல்லு அர்ஜூன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் தொடர்ச்சியான புஷ்பா 2 படம் இன்று வெளியானது. இதற்கிடையில் அல்லு அர்ஜூன் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்த ஒரு படத்திற்காகவே 3 ஆண்டுகள் காத்திந்துள்ளார். அதற்கான பலன் தற்போது கிடைத்து வருகிறது.
47
Allu Arjun Pushpa 2 Movie Review, Pushpa 2 Movie Review
மாஃபியா மன்னான புஷ்பா ராஜ் (அல்லு அர்ஜூன்) மற்றும் போலீஸ் அதிகாரியான பன்வர் சிங் ஷெகாவத் இருவருக்கும் இடையில் நடக்கும் கடுமையான காட்சிகளை மையப்படுத்திய புஷ்பா 2 படம் சுழல்கிறது. இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலை ஷோ பார்க்க தன்னுடைய கணவர், குழந்தைகளுடன் வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், குழந்தைகள் உள்பட அவரும் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தைகள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
77
Allu Arjun Pushpa 2 Movie Screening Sandhya Theatre