Naga Chaitanya and Sobhita Dhulipala wedding
நடிகை சோபிதா துலிபாலா, நாக சைதன்யாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டதால், அதிகாரப்பூர்வமாக 'அக்கினேனி' குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டார். ஹைதராபாத்தில் இவர்களுடைய திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Sobhita Dhulipala wear Golden Color Wedding Saree
சிறிய நுணுக்கங்களுடன், தங்க நூல் இழையோடு நெய்யப்பட்டிருந்த அவரின் திருமண புடவைக்கு பொருத்தமாக அவரின் நகைகள் இருந்தன. அதே போல் தங்க வளையல்களுடன் கூடிய அவரது மருதாணி கைகள் சோபிதாவின் மணப்பெண் அழகை மேம்படுத்தி இருந்தது.
Sobhitha Wear Traditional Jewels
2022 ஆம் ஆண்டு, சோபிதா நாக சைதன்யாவின் ஹைதராபாத் வீட்டில் காணப்பட்டபோது, இந்த ஜோடியின் உறவு பற்றிய ஊகங்கள் பேச துவங்கியது. சைதன்யா தனது புதிய வீட்டைச் சுற்றிக் காட்டிய பிறகு இருவரும் ஒன்றாகச் செல்வதற்கு முன்பு, ஒருவருக்கொருவர் நிறுவனத்தில் இருவரும் ஒன்றாக தோன்றினர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் வெளிநாட்டுக்கு சென்று இருவரும் டேட்டிங் செய்தனர். எதேர்சையாக இவர்களின் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.
தாத்தா சிலை முன்பு நடந்த மேரேஜ்: பாரம்பரிய உடையில் மணமக்கள்: நாக சைதன்யா சோபிதா திருமண போட்டோஸ் வைரல்!
Naga Chaitanya Elegant Dressing
தங்களின் உறவை ஊர்ஜிதம் செய்த இருவரும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், நேற்று திருமண பந்தத்தில் இணைந்தனர். அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மிகவும் பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. நாக சைதன்யா தங்க நிறத்திலான பாரம்பரிய வேஷ்டி அணிந்து காதலி சோபிதாவை கரம் பிடித்தார். இந்த ஜோடிகளுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.