Pushpa 2 The Rule: ரூ.2000 கோடி அள்ளுமா? ஃபயரோடு மாஸ் காட்டிய புஷ்பா 2 – டுவிட்டர் விமர்சனம்!

First Published | Dec 5, 2024, 7:48 AM IST

Pushpa 2 Movie Twitter Review : அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா என்று காணலாம்…

Pushpa 2 The Rule Twitter Review, Pushpa 2 Twiitter Review

Pushpa 2 Movie Twitter Review : அதிக எதிர்பார்ப்புகளுடனும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2. அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகம் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவை சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

Pushpa 2 The Rule, Allu Arjun, Rashmika Mandanna

இந்தியா மட்டுமே உலகம் முழுவதும் புஷ்பா பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. கிட்டத்தட்ட ரூ.250 கோடி போட்டு எடுக்கப்பட்ட புஷ்பா படம் ரூ.400 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது. இப்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் வெளியாகியிருக்கிறது.

Tap to resize

Pushpa 2 Movie Twitter Review

இந்தப் படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. ரூ.400 கோடியில் எடுக்கப்பட்ட புஷ்பா 2 உலகம் முழுவதும் 12000க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடபடுகிறது.

Pushpa 2 The Rule, Allu Arjun, Rashmika Mandanna

இந்தப் படத்திற்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்றால் பெரிய பான் இந்தியா படங்களின் வியாபாரத்தைத் தாண்டிவிட்டது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே திரையரங்கு உரிமைகள் மூலம் ரூ. 1000 கோடி வியாபாரம் செய்துள்ளது. அல்லு அர்ஜூன் ரூ. 300 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல்.

Pushpa 2 The Rule Twitter Review, Pushpa 2 Twiitter Review

ட்விட்டரில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே போர் நடக்கிறது. எதிர்ப்பாளர்கள் எதிர்மறை விமர்சனங்களைத் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் படம் பிளாக்பஸ்டர் என்கின்றனர்.

முதல் பாதியில் புஷ்பா ராஜ் அறிமுகக் காட்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். லேடி கெட்டப் முதல் ஆக்‌ஷன் காட்சிகள் வரையில் அவரை கொண்டாடி வருகின்றனர்.

Allu Arjun, Rashmika Mandanna, Pushpa 2 The Rule Twitter Review

முதல் படத்தை விட 2ஆம் படத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்தே படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் சுகுமார். கதையில் திருப்பங்களும் உள்ளன. சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ரசிக்கும் மாஸ் காட்சிகளுக்குக் குறைவில்லை. ரஷ்மிகாவுடன் நகைச்சுவையும் செய்துள்ளார்.

Pushpa 2 Movie Twitter Review, Pushpa 2 The Rule

இரண்டாம் பாதியில் ஜாத்ரா சண்டை மனதை மயக்கும் வகையில் உள்ளது. அல்லு அர்ஜுனின் தோற்றம் ரசிகர்களைப் பின்தொடரும் வகையில் உள்ளது.

Latest Videos

click me!