இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

Published : Dec 05, 2024, 09:34 AM ISTUpdated : Dec 05, 2024, 11:02 AM IST

KS Ravikumar Mother Passed Away: தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி பிரபலமான, இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.  

PREV
14
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
KS Ravikumar

இயக்குனர் பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ராமராஜன், போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கே.எஸ்.ரவிக்குமார். இதையடுத்து 1990 ஆம் ஆண்டு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநரானாக அறிமுகமான திரைப்படம் 'புரியாத புதிர்'. ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் வெளியான இந்த படத்தில், ரகுமான், ரகுவரன், சரத்குமார், ஆனந்த் பாபு, என நான்கு நடிகர்கள் நடித்திருந்தனர். நடிகை ரேகா, சித்தாரா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர்.

24
KS RaviKumar Super Hit Movies

முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், அடுத்தடுத்து சேரன் பாண்டியன், புது புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், புருஷ லட்சணம், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, என ஏராளமான படங்களை இயக்கினார். குறிப்பாக உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆஸ்தான இயக்குனர் என பெயர் எடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.

தங்க ஜரி காஞ்சிபுர பட்டில் சோபிதா - வேஷ்டி சட்டையில் சைதன்யா; பாரம்பரிய உடையில் நடந்த திருமணம்!

34
KS Ravikumar Acting Movies

திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி தெனாலி, கூகுள் குட்டப்பா, ஹிட்லெஸ்ட் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கேஎஸ் ரவிக்குமார் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

44
ks ravikumar Mother

தொலைக்காட்சிகளில் நடைபெறும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரின் தயார்,  ருக்மணி அம்மாள் (88 வயது).  சமீப காலமாக வயது மூப்பு காரணமாக வரும் உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை 2:30 மணிக்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் வீடு அமைந்துள்ள டெம்பிள் அவென்யூ ரோடு, ஸ்ரீநகர் காலனி, சைதாப்பேட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கே எஸ் ரவிக்குமாருக்கு ஆறுதல் கூறி அவருடைய தாயாருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலக ரசிகர்களை அதிரவைத்த 7 பிரபலங்களின் விவாகரத்து!

click me!

Recommended Stories