எம்ஜிஆர், நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம். தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்யாயமாக திகழ்பவர். இந்திய அரசியல் சந்தித்த அதிசய தலைவர் என எம்ஜிஆரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மற்றவர்களால் கனவிலும் நினைக்க முடியாத காரியங்களை செய்து முடிக்கக்கூடியவராக வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார் எம்ஜிஆர். அவர் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்பது யாராலும் யூகிக்க முடியாது. அவர் எந்த முடிவு எடுத்தாலும் சரியாக இருக்கும் என்று தமிழக மக்கள் நம்பினார். அதுதான் எம்ஜிஆரின் வெற்றிக்கான சூட்சமமாக அமைந்தது.
25
MGR Birthday
ரசிகர்களுக்கு தலைவன், படத்தயாரிப்பாளர்களுக்கு லாப தேவன், ஏழை எளியவர்களுக்கு வள்ளல், எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம் என எக்கச்சக்கமான பரிணாமங்கள் எம்ஜிஆர் என்கிற மனிதருக்குள் புதைந்திருந்தன. ஆச்சர்யங்களாலும், சுவாரஸ்யங்களாலும், பிரம்மிப்புகளாலும், சர்ச்சைகளாலும் நிரம்பியது எம்ஜிஆரின் வாழ்க்கை. அவர் மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார். இன்னும் எம்ஜிஆருக்காகவே இரட்டை இலைக்கு ஓட்டு போடும் மக்கள் இருப்பதே அதற்கு சாட்சி.
இப்படி மக்களின் மனதில் தன்னிகரில்லா தலைவனாக வாழ்ந்து வருகிறார் எம்ஜிஆர். அவரின் 108வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், எம்ஜிஆரைப் பற்றி பலரும் அறிந்திடாத ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்றை இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அது என்னவென்றால் எம்ஜிஆருக்கும் 7ம் நம்பருக்கும் உள்ள கனெக்ஷன் தான்.
45
Unknown Secrets of MGR
எம்ஜிஆர் பிறந்தது ஜனவரி 17ம் தேதி, அவர் பிறந்த ஆண்டு 1917. அவர் தன்னுடைய 7வது வயதில் குடும்பத்துடன் மதுரையில் காலடி எடுத்து வைத்தது மட்டுமின்றி, அந்த வயதில் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்கிற நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்க தொடங்கினார். எம்ஜிஆர் சினிமாவில் முதன்முதலில் நாயகனாக நடித்த படம் சதிலீலாவதி. அந்தப்படம் ரிலீஸ் ஆன ஆண்டு 1937. எம்ஜிஆர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் ராஜகுமாரி. அப்படம் 1947ம் ஆண்டில் ரிலீஸ் ஆனது.
55
MGR connection with Number 7
1957ம் ஆண்டு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எம்ஜிஆர். 1967-ம் ஆண்டு காவல்காரன் படத்துக்காக மாநில அரசு விருதை பெற்றார். எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டதும் இதே ஆண்டு தான். எம்ஜிஆர் முதன்முதலில் முதலமைச்சராக பதவியேற்றது 1977-ம் ஆண்டு. அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது 1987-ம் ஆண்டு. அதுமட்டுமின்றி எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் எண் 4777. இப்படி எம்ஜிஆருக்கும் 7ம் எண்ணுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்பு இருந்தது ஆச்சர்யமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.