தல அஜித்தின் மகன் ஆத்விக், சென்னையில் நடந்த Go Kart என்கிற கார் ரேஸில் கலந்துகொண்டு, முதல் பரிசை கைப்பற்றிய தகவல் வெளியாகியுள்ள நிலையில், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் அஜித். இவர் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட 'விடாமுயற்சி' திரைப்படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் ஜகா வாங்கியது. இந்த தகவல் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
26
Vidamuyarchi Movie
இதைத்தொடர்ந்து நேற்று அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படம் மீதான ஆர்வத்தையும் தூண்டியது. அஜித் முந்தைய படங்களை விட இந்த படத்தில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து, அஜித் மிரள வைத்திருந்தார். அதே அளவிற்கு எமோஷனலான காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தமிழ் ரீமைக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை... லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். ரூ. 250 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசண்டரா, நிகில் நாயர், ரம்யா சுப்ரமணியன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
46
Good Bad Ugly
2023-ல் வெளியான துணிவு படத்தின் ரிலீசுக்கு பின்னர் இப்படம், பிப்ரவரி மாதம் 60-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அஜித் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படமான, குட் பேட் அக்லீ திரைப்படமும் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, நடிகை திரிஷா தான் இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தான் அஜித் தற்போது தீவிரமாக கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளார். இன்னும் 9 மாதங்களுக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறியுள்ள அஜித், கடந்த வாரம் துபாயில் நடந்து முடிந்த 2025 துபாய் 24 ஹார்ஸ் கார் ரேஸில் கலந்து கொண்டு, மூன்றாவது இடத்தை பிடித்தார். இதை தெடர்ந்து உலகம் முழுவதில் இருந்தும் அஜித்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. மேலும் எந்த ஒரு நடிகரும் செய்திடாத சாதனையை, அஜித் செய்துள்ளார் என பிரபலங்கள் மனதார பாராட்டி வந்தனர்.
66
Ajith Son Win Go Kart Car Race
அப்பா ஒரு பக்கம் கார் ரேஸில் கலக்கும் நிலையில், இப்போது மகனும் கார் ரேஸில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளார். அதாவது சென்னையில் நடந்த கோ கார்ட் என்கிற குழந்தைகளுக்காக கார் போட்டியில் தான் அஜித் மகன் ஆத்விக் கலந்து கொண்டுள்ளார். இதில் முதல் பரிசையும் இவர் வென்றுள்ள நிலையில், ரசிகர்கள் அப்பாவை போலவே மகன் என கூறி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.