சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது; 24 மணிநேரத்தில் போலீஸ் ஸ்கெட்ச் போட்டு தூக்கியது எப்படி?

First Published | Jan 17, 2025, 12:24 PM IST

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் முக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

Saif Ali Khan House Robbery

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் மும்பையில் உள்ள பந்த்ராவின் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ஜனவரி 16-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது.

Saif Ali Khan Stabbed by Thief

இதையடுத்து தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர் சைஃப் அலிகானை மீட்டு அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சைஃப் அலிகான், தற்போது அறுவை சிகிச்சை செய்த பின்னர் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த சைஃப் அலிகான அந்த கொள்ளையன் ஆறு முறை கத்தியால் குத்தி உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... கத்தி குத்தில் இருந்து நடிகை கரீனா கபூர் கான் தப்பியது எப்படி?

Tap to resize

Saif Ali Khan hospitalized

போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர், 35 முதல் 40 வயது மதிகக்த்தக்கவர் என்றும், அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் கானின் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்ததாகவும், சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்தும் முன், வீட்டு ஊழியர்களை மிரட்டி ரூ.1 கோடி கேட்டிருக்கிறார். அப்போதை அவரை காப்பாற்ற வந்த போது தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றிருக்கிறார்.

CCTV Footage

சைஃப் வசிக்கும் 12வது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக கொள்ளையன் இறங்கும்போது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் அவரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தன. அதை வைத்து தாக்குதல் நடத்தியவரை பிடிக்க மும்பை போலீசார் உடனடியாக 20 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சைஃப் அலிகான் வீட்டு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வீட்டு ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Saif Ali Khan Attacker Arrested

இந்த நிலையில், சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் ஒருவழியாக தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர். அவர் ஏன் சைஃப் அலிகானை கத்தியால் குத்தினார்?... திருட வந்தாரா அல்லது சைஃப் அலிகானை கொலை செய்ய வந்தாரா? என்கிற கோணத்தில் அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க போலீசாருக்கு சிசிடிவி தான் பெரும் உதவியாக இருந்ததாம். அதை வைத்து அந்த நபரை 24 மணிநேரத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது மும்பை போலீஸ்..

இதையும் படியுங்கள்... சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து…நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்..நடந்தது என்ன?| Asianet News Tamil

Latest Videos

click me!