Lokesh Kanagaraj, Anirudh Ravichander
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
Lokesh Kanagaraj
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் மூன்று படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகியவற்றில் வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார். மாநகரம் படத்துக்கு ஜாவத் ரியாஸ் இசையமைத்து இருந்தார். பின்னர் அவர் இயக்கிய கைதி திரைப்படத்தின் சாம் சிஎஸ் இசையமைத்து இருந்தார். இதையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
இதையும் படியுங்கள்... கவினின் கிஸ் படத்தில் இருந்து சைலண்டாக விலகிய அனிருத்; காரணம் என்ன?
Anirudh, Rajinikanth
இதில் மாஸ்டர் படத்தில் பணியாற்றியபோது அனிருத் உடன் நெருங்கிய நட்பு உருவானதால், தன்னுடைய அடுத்தடுத்த படங்களான விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களிலும் அனிருத்தையே இசையமைக்க வைத்தார் லோகி. சுமார் 5 ஆண்டுகளாக சேர்ந்து பணியாற்றி வந்த இந்த கூட்டணி விரைவில் உடைய உள்ளது. கூலி படத்துக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
Sam CS
ஏனெனில் கூலி படத்தை எடுத்து முடித்ததும் கைதி 2 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் முதல் பாகத்திற்கு சாம் சிஎஸ் தான் இசையமைத்து இருந்தார். அவரின் பின்னணி இசை அப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. அதன் காரணமாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வேறு இசையமைப்பாளரை மாற்ற மனமின்றி சாம் சிஎஸ் இசையமைக்க ஓகே சொல்லி உள்ளாராம் லோகி. கைதி 2 படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களுக்கு அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமானை விட டபுள் மடங்கு சம்பளமா? அனிருத்தால் அரண்டு போன ஜெயிலர் 2 டீம்!