Published : Jan 17, 2025, 10:44 AM ISTUpdated : Jan 17, 2025, 06:11 PM IST
இசை ஞானி இளையராஜா, சுமார் 1200 வருடங்கள் பழமையான திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள, நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இசையின் ராஜா என்று கோலிவுட் ரசிகர்களால் அழைக்கப்படும், இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜா, கடந்த சில வருடங்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்யும் போது, கருவறைக்கு முன்பு அமைத்துள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல இளையராஜா முயன்றபோது ஜீயர்கள் அவரை அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது.
25
Music Director Ilayaraja
இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் இதுகுறித்து இளையராஜா தன்னிலை விளக்கம் ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் கொடுத்தார்.
இதுகுறித்து அவர் போட்டிருந்த பதிவில், 'என்னை மையமாக வைத்து, சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என கூறி இருந்தார். இதன் பின்னரே இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
45
Ilayaraja Music Concert in Tirunelveli
இதை தொடர்ந்து இளையராஜா, "நெல்லையில் இன்று மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள நிலையில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், தற்போதைய இளம் இசையமைப்பாளருக்கு சவால் விடும் விதமாக 80 வயதிலும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் வெளியான விடுதலை மற்றும் விடுதலை பார்ட் 2 படங்களில், இவரின் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ரசிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.