என்னடா இப்படி இறங்கிட்டீங்க! செளந்தர்யாவை டைட்டில் வின்னர் ஆக்க நடக்கும் மோசடி

Published : Jan 17, 2025, 08:35 AM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யாவை ஜெயிக்க வைக்க அவரது காதலன் விஷ்ணு செய்யும் மோசடியை நடிகை சனம் ஷெட்டி அம்பலப்படுத்தி இருக்கிறார்.

PREV
15
என்னடா இப்படி இறங்கிட்டீங்க! செளந்தர்யாவை டைட்டில் வின்னர் ஆக்க நடக்கும் மோசடி
Soundariya Scam Exposed

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பைனலை நெருங்கிவிட்டது. இந்நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது பைனலுக்கு முத்துக்குமரன், செளந்தர்யா, ரயான், பவித்ரா, விஷால் ஆகிய ஐந்து பேர் மட்டுமே சென்றிருக்கிறார்கள். 

25
Bigg Boss Soundariya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தான் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் இருந்து போட்டியாளர்கள் வெளியே PR வேலைகளை செய்ய ஆட்களை வைத்து ஓட்டு வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த சீசனில் டைட்டில் வென்ற அர்ச்சனா, PR வேலைகளால் தான் டைட்டில் ஜெயித்தார் என்று அவருடன் பங்கேற்ற சக போட்டியாளர்களே குற்றம் சாட்டி இருந்தனர்.

35
sanam shetty

அதே போல் தற்போது நடைபெற்று வரும் 8வது சீசனிலும் PR வேலைகள் அதிகளவில் நடப்பதாக ரீ-எண்ட்ரி ஆகும் போட்டியாளர்கள் கூறி வருகின்றனர். அதிலும் செளந்தர்யா இந்த சீசனில் எதுவுமே செய்யாமல் வெறும் PR டீமின் உதவியும் பைனல் வரை வந்துவிட்டதாக சுனிதா நேரடியாகவே கூறினார். இதை செளந்தர்யா மறுத்தாலும் தனக்காக வேலை செய்ய PR டீம் இருப்பதையும் ஒத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் செளந்தர்யாவின் PR டீம் செய்யும் மோசடி வேலைகளை முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... சாதனையோடு எலிமினேட் ஆன ஜாக்குலினுக்கு பிக் பாஸ் கொடுத்த விலை மதிப்பில்லா பரிசு!

45
Soundariya Insta Page

அதன்படி பைனலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதால் செளந்தர்யாவை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என அவரது காதலன் விஷ்ணு விஜய் முயன்று வருவதை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறார் சனம் ஷெட்டி. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கும் முறையும் உள்ளது. அதன்படி செளந்தர்யாவுக்கு வாக்களிக்க கொடுக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் நம்பரை செளந்தர்யாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இணைத்துள்ளனர்.

55
Soundariya Lover Vishnu Insta Page

யாரேனும் அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு சென்றால் அதில் Call என்கிற ஆப்ஷன் இருக்கும். அது செளந்தர்யாவின் நம்பராக இருக்கும் என எண்ணி கால் செய்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு அந்த மிஸ்டு கால் நம்பரை அதில் இணைத்து வைத்திருக்கிறார்கள். அதேபோல் செளந்தர்யாவின் காதலன் விஷ்ணு விஜய், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எனக்கு உடனே கால் பண்ணுங்க அவசரம் எனக்கூறி ஒரு போன் நம்பரை பதிவிட்டுள்ளார். அது செளந்தர்யாவுக்கு வாக்களிக்கும் நம்பர். அவருக்கு என்ன ஆனதோ என பதறி பலர் அதற்கு கால் செய்து வருகின்றனர். பின்னர் தான் அது அவர் செய்யும் மோசடி வேலை என்பது தெரியவந்துள்ளதாக சனம் ஷெட்டி ஆதரங்களை ஷேர் செய்திருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னடா இப்படி இறங்கீட்டீங்க என கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸில் இருந்து வெயிட்டான சம்பளத்தோடு எலிமினேட் ஆன ஜாக்குலின்!

click me!

Recommended Stories