குடிச்சிட்டு 3 மணி நேரமா ஒரே கிளாஸா எடுப்பாரு: ஓபனா சொல்லிய விஜய் சேதுபதி!

First Published | Jan 17, 2025, 8:19 AM IST

Vijay Sethupathi Share about Arvind Swamy's Secrets an Interview : ஒரு பேட்டியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி குடிச்சிட்டு 3 மணி நேரமா ஒரே கிளாஸா எடுப்பாரு என்று பிரபலமான நடிகரைப் பற்றி விஜய் சேதுபதி ஓபனா சொல்லிருக்கிறார்.

vijay sethupathi

Vijay Sethupathi Share about Arvind Swamy's Secrets an Interview : தமிழ் சினிமாவில் தனது திறமை மற்றும் அயராத உழைப்பால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வந்த மகாராஜா உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது. சீனாவில் வெளியான இந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

Vijay Sethupathi and Arvind Swamy Interview, 2025 Actors Rountable

தற்போது காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை தவிர்த்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி வரும் 19ஆம் தேதி இறுதிபோட்டியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிய விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியிருந்தது. அதன்படி அவருடைய மொத்த சொத்த மதிப்பு ரூ.140 கோடி என்று தகவல் வெளியாகியிருந்தது.

Tap to resize

Vijay Sethupathi and Arvind Swamy Interview

இந்த நிலையில் தான் ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ் ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். இதில் அவருடன் இணைந்து அரவிந்த் சாமி, சித்து, பிரகாஷ் ராஜ், உன்னி முகுந்தன் ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது தான் இப்போது டிரெண்டாகி வருகிறது. அதாவது, அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது அரவிந்த் சாமி சிரித்துக் கொண்டே இருக்கிறார். இவரு எப்பவும் இப்படித்தான் சாரு. அவர உடனே வெளியில் அனுப்புங்க என்று அவர் பேசவே மற்ற நடிகர்கள் சிரிக்கிறார்கள்.

Vijay Sethupathi

விஜய் சேதுபதியை பார்த்து மற்ற நடிகர்கள் பயப்படுவதாக அரவிந்த் சாமி கூறவே, உடனே விஜய் சேதுபதியோ இல்ல இல்ல, நான் தான் உங்கல பார்த்து பயப்படுவேன். ஏனென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியும். போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லுவாரு. அப்புறம் குடிச்சிட்டு 2, 3 மணி நேரம் கிளாஸ் எடுப்பாரு. சில நேரம் விடியுற வரைக்கும் போகும். இது ஒவ்வொரு முறையும் நடக்கும் என்று சிரிச்சிக்கிட்டே சொல்லிருக்கிறார். இதற்கு முன்னதாக இருவரும் இணைந்து செக்க சிவந்த வானம் படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். ஆதலால், இருவருக்கும் ஒருவர் பற்றி ஒருவருக்கு நன்கு தெரியும். இதன் காரணமாக இருவரும் இப்படி பேசிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!