சாதனையோடு எலிமினேட் ஆன ஜாக்குலினுக்கு பிக் பாஸ் கொடுத்த விலை மதிப்பில்லா பரிசு!

Published : Jan 17, 2025, 07:42 AM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து ஜாக்குலின் எலிமினேட் ஆன நிலையில், அவருக்கு பிக் பாஸ் ஒரு விலைமதிப்பில்லா பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

PREV
16
சாதனையோடு எலிமினேட் ஆன ஜாக்குலினுக்கு பிக் பாஸ் கொடுத்த விலை மதிப்பில்லா பரிசு!
Jacquline

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜாக்குலின், செளந்தர்யா, முத்துக்குமரன், பவித்ரா, விஷால், ரயான் ஆகிய 6 பேர் பினாலே வாரத்திற்குள் சென்றனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் ஜெயிக்க உள்ளார். இதனிடையே இந்த வாரம் முழுக்க பணப்பெட்டிக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் வீட்டின் வெளியே வைக்கப்பட்ட பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக் கொண்டு உள்ளே வரவேண்டும்.

26
Bigg Boss Tamil season 8

உள்ளே வரும் போட்டியாளர்களுக்கு அந்த பணமும் வழங்கப்பட்டு அவர் காப்பற்றப்படுவார். அதே வேளையில் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துவர முடியாவிட்டால் அந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக எலிமினேட் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த டாஸ்க்கில் முதலாவதாக களமிறங்கிய முத்துக்குமரன் முதல் ஆளாக சென்று 50 ஆயிரத்திற்கான பணப்பெட்டியை எடுத்து வந்தார்.

36
Bigg Boss Tamil season 8 contestants

அடுத்ததாக 2 லட்சத்துக்கான பணப்பெட்டியை ரயான் மற்றும் பவித்ரா வெற்றிகரமாக எடுத்தனர். பின்னர் 5 லட்சத்திற்கான பணப்பெட்டியை எடுக்க சென்ற செளந்தர்யா, தூரம் அதிகமாக இருந்ததால் தன்னை காப்பாற்றிக் கொள்ள பாதியிலேயே திரும்பி வந்துவிட்டார். அடுத்ததாக விஷால் விறுவிறுவென ஓடிச் சென்று 5 லட்சத்துக்கான பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தார். இறுதியாக 8 லட்சத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... டாஸ்கில் தோற்றதால் எலிமினேட் ஆன ஜாக்குலின்! பணப்பெட்டி டாஸ்க்கில் நடந்தது என்ன?

46
Jacquline Eliminated

இந்த பெட்டியை எடுக்க ஜாக்குலின் சென்றார். 35 விநாடிகளில் 80 மீட்டர் தொலைவில் இருக்கும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே வர வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த சவாலை ஏற்று ஓடிய ஜாக்குலின் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாலும் அவர் 2 விநாடிகள் தாமதமாக வந்ததால் அவர் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தார் பிக் பாஸ். அவரின் இந்த எவிக்‌ஷன் சக போட்டியாளர்களுக்கே பேரதிர்ச்சியாக இருந்தது.

56
Bigg Boss Gift to Jacquline

ஜாக்குலினும் கண்ணீர்விட்டு அழுதார். டாப் 2வில் வரும் அளவுக்கு மக்களின் ஆதரவை பெற்றிருந்த ஜாக்குலின், பாதியில் வெளியேற்றப்பட்டது காண்போரை கண்கலங்க செய்தது. ஒவ்வொரு போட்டியாளரும் எலிமினேட் ஆகும் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட டிராபியை உடைக்க வேண்டும். ஆனால் ஜாக்குலின் எலிமினேட் ஆகும் போது அந்த டிராபியை உடைக்க வேண்டாம் என கூறிய பிக் பாஸ் அவருக்கு அதனை பரிசாக வழங்கி நெகிழ வைத்தார்.

66
Jacquline Records in Bigg Boss

இந்த பிக் பாஸ் சீசனில் ஜாக்குலின் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார். குறிப்பாக இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற 15 நாமினேஷன்களிலும் ஜாக்குலினின் பெயர் இடம்பெற்றது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இத்தனை முறை நாமினேட் ஆன போட்டியாளர் எவரும் இல்லை. அதுமட்டுமின்றி இத்தனை முறை நாமினேட் ஆகியும் கடைசி வரை அவர் மக்களால் எலிமினேட் செய்யப்படவில்லை. இந்த சீசனில் ஒருமுறை கூட ஜாக்குலின் கேப்டன் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸில் இருந்து வெயிட்டான சம்பளத்தோடு எலிமினேட் ஆன ஜாக்குலின்!

click me!

Recommended Stories