கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரவீனா டாண்டனுக்கு நடிகர் ஒருவர் கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம் கொடுத்த, கசப்பான அனுபவம் குறித்து அவரே பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
திரைப்படங்களில் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சிகள் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. ஆனால் 70-வது, 80-பது, மற்றும் 90-களில் ஆபாசமான எந்த ஒரு காட்சியும் படங்களில் பெரிதாக இடம்பெறாது. இந்த நிலையில் தான், தனக்கு நடிகர் ஒருவரால் நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து நடிகை ரவீனா டாண்டன் கூறியுள்ளார்.
27
Kamal haasan Heroine
90-களில் பாலிவுட் திரையுலகின் கிரேஸி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் ரவீனா டாண்டன். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஆளவந்தான் படத்திலும் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மேலும் பல பாலிவுட் நடிகர்களுக்கு 90-களில் ஜோடியாக நடித்துள்ள ரவீனா டாண்டன், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பார்ப்பதற்கு மிகவும் மாடர்னாக இருந்தாலும், ஆபாச ஆடை அணிந்து நடிப்பது மற்றும் முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். ஒரு சில படங்களில் ஹீரோவுடன் ரொமான்ஸ் சீன்களில் நடித்திருந்தாலும், அவை மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் அந்த சமயத்தில் தன்னை ஒரு பாலிவுட் ஹீரோ கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம் கொடுத்தார் என பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
47
Raveena Tandon Bad Experience
இந்த பேட்டியில், அந்த ஹிந்தி படத்தில், ஹீரோவுடன் காதல் காட்சியில் நடிக்கும் போது ஹீரோ என்னை முத்தம் கொடுக்க வற்புறுத்தினார். பின்னர் என்னை கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம் கொடுத்தார். எனக்கு முத்தக் காட்சிகள் பிடிக்காது. அந்த காட்சிக்கு, அவர் கொடுத்த முத்தம் தேவையில்லாதது. இது எனக்கு அவர் மீது கோபத்தை தான் வரவைத்தது.
அந்த நடிகை எனக்கு உதடு முத்தம் கொடுத்தவுடன் நான் வாந்தி எடுக்க துவங்கி விட்டேன். என்னால் அவர் செய்ததை ஜீரணிக்கவே முடியவில்லை என ரவீனா டாண்டன் கூறியுள்ளார். அதன் பிறகு ரவீனா பாத் ரூம் சென்று 100 முறை முகத்தையும் - வாயையும் தண்ணீர் ஊற்றி கழுவினாராம்.
67
KGF Movie Actress
இதன் பின்னர் ஹீரோ வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக ரவீனா கூறியுள்ளார். அந்தக் காட்சியைத் தவிர, தனது கேரியரில் ஒரு முத்தக் காட்சியில் கூட நடித்ததில்லை என ரவீனா கூறியுள்ளார். தனது உடல்நிலை காரணமாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்ததாக கூறி இருக்கிறார். கடைசியாக ரவீனா டாண்டன் கேஜிஎஃப் 2 படத்தில் பிரதமராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவில் ரவீனா டாண்டனின் மகள் ராஷா ததானி பாலிவுட்டில் நுழைய தயாராகி வருகிறார். முத்தக் காட்சிகளில் நடிக்காததால், தன் மகளும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ககண்டீஷன் போட்டு தான் நடிக்க வைக்க போவதாகவும், கதைக்கு தேவைப்பட்டால் தைரியமான காட்சிகளில் கூட மகளை நடிக்க அனுமதிப்பேன் என்கிறார் ரவீனா தெரிவித்துள்ளார்.