பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அதிகாலையிலேயே கொள்ளையன் ஒருவர், கத்தியால் குத்தியதாக வெளியான சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருடைய மனைவி கரீனா கபூர் கான் நேற்று இரவு வெளியே சென்றிருந்ததால் கத்திக்குத்தில் இருந்து தப்பியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
26
Saif Ali Khan Attacked
பாலிவுட் திரை உலகில், முன்னணி நடிகராக இருப்பவர் சைஃப் அலிகான். கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரைப்படங்களில், வில்லனாக நடித்து வருகிறார். பிரபாஸ் நடிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவான, 'இராமாயணம்' திரைப்படத்தில் சைஃப் அலிகான் ராவணன் வேடத்தில் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு இப்படத்திற்கு எடுபடவில்லை என்கிற விமர்சனம் எழுந்தது. அதேபோல் சிஜி பணியும் சிறப்பாக மேற்கொள்ளவில்லை என கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' திரைப்படத்திலும் சைஃப் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து 'பான்' இந்தியா திரைப்படங்களை தேர்வு செய்து, தென்னிந்திய மொழி படங்களிலும் முகம் காட்டி வரும் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில், கொள்ளை சம்பவம் அரங்கியது தான் பாலிவுட் திரையுலகில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
46
Saif Ali khan Hospitalized
நடிகர் சைஃப் அலிகான் தன்னுடைய இரண்டு மகன்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை இரண்டரை மணி அளவில் ஏதோ சத்தம் கேட்டதை தொடர்ந்து, தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது தன்னுடைய வீட்டுக்குள் மர்ம நபர் யாரோ புகுந்ததை அறிந்த சைஃப் அலிகான் சத்தம் போட்டுக் கொண்டே, அவரை பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையன் தன் கையில் இருந்த கூர்மையான கத்தி போன்ற ஆயுதத்தை பயன்படுத்தி சைஃப் அலிகான் உடலில் ஆறு இடங்களில் குத்தி விட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இரத்த வெள்ளத்தில் இருந்த சைஃப் அலிகான், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காவல்துறையினர் வெளியிட்ட முதற்கட்ட தகவல் அறிக்கையில், வீட்டில் இருந்த மற்ற உறுப்பினர்கள் விழித்தெழுந்த பின்னரே... அந்த கொள்ளையன் வீட்டை விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் சைஃப் அலிகானை குத்துச்சென்ற மர்ம நபர் யார்? என்பதை போலீசார் வலைபோட்டு தேடி வருகின்றனர். சந்தேகப்படும் விதத்தில் இருப்பவர்களை கைது செய்து விசாரிக்கவும், பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
66
how to Escape Knife Attack
இந்நிலையில் கரீனா கபூர், இந்த சம்பவத்தில் இருந்து தப்பியது எப்படி? என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சைஃப் அலிகான் தாக்கப்பட்ட அன்றைய இரவு, கரீனா வீட்டில் தங்கவில்லையாம். முக்கிய விஷயம் காரணமாக அவரின் சகோதரி மற்றும், சோனம் கபூருடன் தங்கி இருந்தாராம். ஒருவேளை வீட்டில், கரீனா இருந்திருந்தால், அவர் தாக்கப்பட்டவே வாய்ப்பு அதிகம் என்றும், அதிஷ்டத்தின் காரணமாகவே அவர் தப்பிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.