நடிகர் சைஃப் அலி கான் நேற்று தனது வீட்டில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சி மூலம், நடிகரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
25
Saif Ali Khan Admitted in Leelavathi Hospital
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் பாந்தராவில் உள்ள தனது வீட்டில் நள்ளிரவு கொள்ளையனால் தாக்கப்பட்டார். இதனால் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில், சைஃப் அலிகான் மூத்த மகன் இப்ராஹிம் அவரை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியானது.
சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் யார் என்பது பற்றியும், அவரை தாக்கிய நபர் குறித்தும் போலீசார் FIR பதிவு செய்து தனி குழு அமைத்து, ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் யாராவது தென்பட்டால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
45
Attacked Suspect Photo Reveled
மேலும் போலீசார் சைஃப் அலிகான் வீட்டின் சிசிடிவி காட்சிகளை அலசி ஆராய்ந்ததில்... கொள்ளையன் முகம் தெளிவாக தெரியும் புகைப்படம் சிக்கியுளளது. இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, மும்பை போலீசார் கூறுகையில், சைஃப் அலி கான் வீட்டில் திருட முயன்ற நபர் தான் இவர் தான். அவர் ஃபயர் எக்சிட் வெளியேறும் படிக்கட்டு வாயிலாக உள்ளே நுழைந்துள்ளார். அந்த நபரின் முகம் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார். மேலும் இதற்க்கு முன் அந்த கொள்ளையன் வீட்டை நோட்டமிட்டு தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா? என போலீசார் சந்தேகப்படுவதால், கடந்த 10 நாட்களாக சைஃப் வீட்டின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.