ஆளவிடுங்கடா சாமி; விடாமுயற்சி உடனான போட்டியில் இருந்து விலகிய தனுஷ் படம்!

Published : Jan 17, 2025, 10:09 AM IST

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அஜித்தின் விடாமுயற்சி படத்துடனான போட்டியில் இருந்து விலகி உள்ளது.

PREV
14
ஆளவிடுங்கடா சாமி; விடாமுயற்சி உடனான போட்டியில் இருந்து விலகிய தனுஷ் படம்!
Neek vs Vidaamuyarchi

தனுஷ் நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது குபேரா திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இந்த இரண்டு படங்களின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24
NEEK Movie

இதில் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி உள்ளதோடு அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் தனுஷ். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர அவர் இயக்கி முடித்துள்ள மற்றொரு படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இதில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஆக்ஷனில் அடிச்சு பொளக்கும் அஜித்; ரிலீஸ் தேதியோடு வெளியானது - விடாமுயற்சி ட்ரைலர்!

34
vidaamuyarchi

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், இப்படத்தை வருகிற பிப்ரவரி 7-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது. ஆனால் தற்போது அப்படத்தின் ரிலீசுக்கு எமனாக வந்துள்ளது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம். பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தற்போது பிப்ரவரி 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

44
NeeK Movie Release Date

அஜித் படத்துடன் போட்டியிட்டால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி பிப்ரவரி 7-ந் தேதி ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தற்போது ஒரு வாரம் முன்னதாக, அதாவது ஜனவரி 30ந் தேதியே ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் வாஷ் அவுட் ஆன பொங்கல் ரிலீஸ் படங்கள்! காரணம் என்ன?

Read more Photos on
click me!

Recommended Stories