மீசை வளரவில்லை; தேவர் மகன் படத்தை மிஸ் பண்ணியதன் சீக்ரெட்டை உடைத்த மீனா!

Published : Jan 15, 2025, 03:14 PM IST

தேவர் மகன் படத்தில், ரேவதிக்கு பதிலா நான் நடிக்க வேண்டியது என்றும், எதனால் இந்த வாய்ப்பு கைநழுவியது என மீனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.  

PREV
15
மீசை வளரவில்லை; தேவர் மகன் படத்தை மிஸ் பண்ணியதன் சீக்ரெட்டை உடைத்த மீனா!
Meena Sagar

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று அவரோட மகளே குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் அளவிற்கு சினிமாவில் உயர்ந்துள்ளார். ரஜினி அங்கிள் என்று கூப்பிட ஆரம்பித்த மீனா, நாளடைவில் அவருக்கே ஜோடியாக நடிக்கும் அளவிற்கு மாறினார்.

25
Meena Acting Child Artist

கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் சினிமாவில் சாதனை படைத்துள்ளார். சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் தான் மீனாவின் முதல் அறிமுகம். அதன் பிறகு எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய இரு படங்களில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார். அதுவும் குழந்தை நட்சத்திரம் தான். இது மீனாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

சேலை கட்டி அழகில் ஹீரோயின்களை மிஞ்சிய அருண் விஜய் மகள் பூர்வி; பொங்கல் கொண்டாட்ட போட்டோஸ்!

35
Meena Movies

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மலையாள மொழியிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மீனா சினிமாவில் இத்தனை ஆண்டு காலம் ஜொலிக்க அவரது அம்மாவும் ஒரு காரணம். ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு எந்தப் படம் ஓகே ஆகும், எந்தப் படம் ஓகே ஆகாது என்பது பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதனால் ஒரு சில படங்களையும் அவர் இழந்திருக்கிறார். அப்படி அவர் இழந்த நல்ல படங்கள் பற்றி மீனாவே சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான படம் தான் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் நடித்த தேவர் மகன் படம்.
 

45
Meena Daughter Nainika

சமீபத்தில் ஏன் 'தேவர் மகன்' படம் மிஸ் ஆனது என்பது குறித்து மீனாவே விளக்கம் கொடுத்திருக்கிறார். இது குறித்து மீனா கூறியிருப்பதாவது... தேவர் மகன் படத்திற்காக மேக்கப் டெஸ்ட் பெரிசா செட்டாகல. முகத்துல மஞ்சள் பூசிய பிறகும் கூட மேக்கப் செஸ்டுக்காக போட்டோ எடுத்தாங்க. ஆனால், அது கமல் ஹாசனுக்கு ஏதோ ஒரு டிஸ்டர்பன்ஸ கொடுத்திருச்சு. அதனால் எனக்கு பதிலாக அந்த கதைக்கு செட் ஆகுற மாதிரி ரேவதியை நடிக்க வச்சாங்க. இப்படித்தா என்னால் அந்த படத்துல நடிக்க முடியாமல் போனது என்று கூறி இருந்தார்.

'வாடிவாசல்' படப்பிடிப்புக்கு தயாரான வெற்றி மாறன் - சூர்யா! வெளியானது புகைப்படம்!
 

55
Devar Magan Movie

இதை தொடர்ந்து இன்னொரு காரணமும் இருக்குனு கூட சொல்லலாம். அது படத்தில் ரேவதிக்கு முன்பு என்னைத் தான் ஓகே பண்ணியிருந்தாங்க. அப்போது கமல் ஹாசனுக்கு மீசை நன்றாக வளரவில்லை. மீசை வளர இன்னும் நாட்கள் ஆகும் என்பதால் படப்பிடிப்பை கொஞ்ச நாள் தள்ளி வச்சாங்க. அப்படி தள்ளி வைத்ததால் நான் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதனால், ரேவதி அந்தப் படத்தில் நடித்தார் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories