
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல வருடங்கள் ஆன பின்னும், இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்காமல் உள்ளது. எனவே இப்படம், கைவிடப்பட்டதாகவே அவ்வப்போது சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. ஆனால் தொடர்ந்து இந்த தகவலை தயாரிப்பாளர் தாணு மறுத்து வந்தார். தற்போது 'வாடிவாசல்' படத்தில், மீண்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா சூர்யா இணைவது உறுதியாகி உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடைசியாக 'விடுதலை 2' திரைப்படம் வெளியானது. சூரி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'விடுதலை 2' திரைப்படம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. முதல் பாகத்துடன் ஒப்பிட்டு, இப்படத்தை ரசிகர்கள் விமர்சனம் செய்ததே இப்படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. அதே போல் பல விஷயங்களில் இயக்குனர் வெற்றிமாறனின் நேர்த்தியான டச் மிஸ் ஆனது. இதுவரை தோல்வியே கண்டிடாத இயக்குனர் என பெயர் எடுத்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு, விடுதலை 2 திரைப்படம் முதல் தோல்வியாக அமைந்தது.
ரவி மோகன் - நித்யா மேனன் நடித்த 'காதலிக்க நேரமில்லை' தேறியதா? முதல் நாள் வசூல் விவரம் இதோ!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனுஷுடன் 5-ஆவது முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இணைய உள்ள 'வடசென்னை 2' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்ட வாடிவாசல் திரைப்படத்தை மீண்டும் தூசு தட்டி கையில் எடுத்துள்ளார் வெற்றி மாறன். இதனை உறுதி செய்வது போல், தயாரிப்பாளர் தாணுவை சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகின்றன.
கடந்த 1958 ஆம் ஆண்டு, சி எஸ் செல்லப்பா எழுதிய நாவலை தழுவியே வாடிவாசல் திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. அதேபோல் இந்த படத்தில் ஜல்லிக்கட்டின் பழமையான பாரம்பரியத்தை இயக்குனர் வெற்றிமாறன் காட்சிப்படுத்த உள்ளார். சூர்யா இந்த படத்திற்காக நிஜமான ஜல்லிக்கட்டு காளையுடன் பயிற்சி பெற்ற நிலையில், மீண்டும் இப்படத்திற்கான பணியில் தீவிரமாக இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் கலாச்சாரம், வீர மற்றும் மனிதர்களுக்கும் காளைக்கும் இடையேயான அழகான தொடர்பை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட உள்ளது.
சேலை கட்டி அழகில் ஹீரோயின்களை மிஞ்சிய அருண் விஜய் மகள் பூர்வி; பொங்கல் கொண்டாட்ட போட்டோஸ்!
கடந்த 2022 ஆம் ஆண்டு இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஜூன் மாதத்தில், ஜல்லிக்கட்டு காளையுடன் நடிகர் சூர்யா பயிற்சி பெறும் புகைப்படங்களையும் வெளியிட்டார். பின்னர் படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், 2-ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தில், நடிகர் சூர்யா இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துவரும் படத்தில் நடித்து முடித்த பின்னர் இணைவார் என கூறப்படுகிறது. வெற்றி மாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி முடித்த பின்னர் வடசென்னை 2 படத்தை இயக்குவாரா? அல்லது வடசென்னை திரைப்படத்திற்கு பின்னர் இந்த படத்தின் பணிகள் துவங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.