Ravi Mohan and Nithya Menen Movie
நடிகர் ஜெயம் ரவி இந்த புதிய ஆண்டில்... தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்ட நிலையில், நேற்றைய தினம் இவர் நடிப்பில் உருவான 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் வெளியானது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான இந்த படம்... கிட்ட தட்ட நவ நாகரீக காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் கிட்ட தட்ட மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி திரைப்படத்தை நினைவு படுத்து விதத்தில் உள்ளதாக ட்ரைலரை பார்த்த போதே ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வந்தனர்.
Jayam Ravi Kadhalikka Neramillai Movie Review
மேலும் இந்த படத்தில், வினய் ராய், யோகி பாபு, சுனில், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்து வரும் இப்படம், குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆனது. இதற்க்கு காரணம் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகியுள்ள, வணங்கான், மத கஜ ராஜா, கேம் சேஞ்சார் போன்ற படங்கள் பெருவாரியான திரையரங்குகளை ஆக்கிரமித்ததது தான்.
சேலை கட்டி அழகில் ஹீரோயின்களை மிஞ்சிய அருண் விஜய் மகள் பூர்வி; பொங்கல் கொண்டாட்ட போட்டோஸ்!
Kadhalikka Neramillai Day 1 Box Office
ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வரும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம், முதல் நாளில் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.2.35 கோடி வசூலித்தது. முதல் நாளில் இப்படம், நல்ல வசூலை பெற்றுள்ளதாகவே பார்க்கப்படும் நிலையில், அடுத்தடுத்து தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
Ravi Mohan Kadhalikka Neramillai Cast
கிருத்திகா உதயநிதி இதற்க்கு முன் இயக்கிய படங்களை விட, இந்த படத்தில் தன்னுடைய தரமான கதை மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அதே போல் இந்த படத்தின் கதைக்கு ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் சரியான தேர்வு என்கிற பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், Gavemic ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேஷ்டி சட்டையில் உயிர் - உலகம்; நயன்தாரா கணவருடன் கொண்டாடிய படு ஜோரான பொங்கல்!